வீழுமாறு, நீ கருதி
செய்த பாவம் கழிப்பவர் எவர் - நீ அறிந்து செய்த
பாவத்தைப் போக்குவார் யாவர் யாம் நோக்கம் தருதலால் எளிதில் தீரச்
சாற்றுதும் - நாம் திருவருணோக்கஞ் செய்தமையால் எளிதினில் நீங்குமாறு
கூறுகின்றோம்; ஐயம் கை ஏற்று ஒரு பொழுது உண்டி - கையிலே
பிச்சையேற்று ஒரு பொழுது உண்பாய், ஈசன் உறுதவர் ஏவல் செய்தி -
சிவபெருமானுக்கு அடியார்களாகிய மிக்க தவத்தினையுடையாரின் ஏவலைச்
செய்வாய்.
வருக்கமும்
நரகில் வீழ்தல் கூறவே சொன்னோர் வீழ்தலும், நாமஞ்
சொன்னோர் வீழ்வர் எனவே இணங்கினார் முதலானவர் வீழ்தலும்
கூறவேண்டாவாயின. அறியாமற் செய்த பாவமென்றென்பார் 'கருதி நீ செய்த
பாவம்' என்றார். எவராலும் கழித்தற் கரிதாயினும் எமது திருநோக்கிற்
கிலக்கானமையின் தீரச் சாற்றுதும் என்றாரென்க. உண்டி - உண்ணுதி. உண்டி, செய்தி
என்பவற்றில் த் : எழுத்துப் பேறு; இ எதிர்கால விகுதி. (31)
செங்கதிர்க் கடவுள் வானந் தீண்டுமுன் னெழுந்து தீந்தண்
பைங்கதி ரறுகு கொய்து பசுக்களை யருத்தி யார்வம்
பொங்கமுப் போதுங் கோயிற் புறத்தொட்டித் தீர்த்த மாடிச்
சங்கரன் றனைநூற் றெட்டு மெய்வலஞ் சாரச் செய்தி.
|
(இ
- ள்.) செங்கதிர்க் கடவுள் வானம் தீண்டு முன் எழுந்து - சிவந்த
கிரணங்களையுடைய சூரியன் தோன்றி வானைத் தொடுவதற்கு முன்னமே
எழுந்து, தீந்தண் பைங்கதிர் அறுகு கொய்து - இனிய தண்ணிய பசிய
ஒளியையுடைய அறுகம் புல்லைக் கொய்து, பசுக்களை அருத்தி - பசுக்களை
உண்பிப்பாய்; ஆர்வம் பொங்க முப்போதும் கோயில் புறத்தொட்டித் தீர்த்தம்
ஆடி - அன்பு மேலோங்க மூன்று காலமும் திருக்கோயிலின் புறத்திலுள்ள
தொட்டித் தீர்த்தத்தின்கண் நீராடி, சங்கரன் தனை நூற்றெட்டு மெய்சார
வலம் செய்தி - சிவபெருமானை நூற்றெட்டு முறை உடம்பாலே பொருந்த
வலஞ் செய்வாய்.
நல்ல
நிலத்திலே செழுமையாகவிருக்கும் அறுகென்க. அருத்துதி
எனற்பாலது அருத்தி என நின்றது. முப்போது - காலை நண்பகல் மாலை.
கோயிற் புறத்தொட்டி - அபிடேக நீர் வந்து விழும் புறத்திலுள்ள தொட்டி.
சங்கரன்றன்னை என்பதற்குச் சிவபெருமான் திருக்கோயில் என்பது
கருத்தாகக் கொள்க. மெய்வலம் அங்கப் பிரதக்கணம். (32)
இத்தவ நெறியி னின்றா லிப்பழி கழியு மென்னாச்
சித்தவன் புடைய வேடத் திருவுருக் கொண்ட கொன்றைக்
கொத்தவ னுரைத்தான் கேட்டுக் கொடிச்சியா யிருந்த வம்மை
மத்தவன் கரித்தோல் போர்த்த மறவனை வினவு கின்றாள்.
|
(இ
- ள்.) இத் தவநெறியில் நின்றால் இப்பழி கழியும் என்னா -
இந்தத் தவ ஒழுக்கங்களினின்றால் இந்தக் கொலைப் பழி நீங்கும் என்று,
|