பற்றுக் கோடுமில்லாது,
வீயக்கடவனைக் காப்பது அன்றோ காப்பு என்றான்
- அழியக் கடவோனைக் காப்பதல்லவா பாதுகாப்பாகும் என்று
கூறியருளினான்.
நீசர்
நினைக்கினும் அவருக்கும் அச்சமுண்டாகும் பழி. அஞ்சான் :
முற்றெச்சம். காப்பன்றோ கருணையாற் காக்கும் காப்பென்று சொல்லப்படுவ
தென்க. (35)
செய்தற்போ
தனைய வுண்க ணேரிழை நீயா தொன்று
செய்தற்குஞ் செய்யா மைக்கும் வேறொன்று செயற்கு மாற்றல்
மெய்தக்க கருணை வள்ளல் வேண்டினெவ் வினைஞ ரேனும்
உய்தக்கோ ராதல் செய்கை யுன்னருள் விளையாட் டன்றோ. |
(இ
- ள்.) நெய்தல்போது அனைய உண்கண் நேரிழை - கருங்குவளை
மலரை ஒத்த மையுண்ட கண்களையுடைய உமையம்மையார், நீ யாதொன்று
செய்தற்கும் செய்யாமைக்கும் வேறு ஒன்று செயற்கும் மெய் ஆற்றல் தக்க
கருணை வள்ளல் - நீ எதுவும் ஒன்றனைச் செய்தற்கும் செய்யாமைக்கும்
மற்றொன்று செய்தற்கும் உண்மை வலியுடைய அருள் வள்ளலாகுவை;
எவ்வினைஞரேனும் வேண்டின் உய்தக்கோர் ஆதல் செய்கை - எத்தகைய
கொடுந்தொழிலினையுடையரேனும் விரும்பினால் அவர் உய்தி
பெறுவதற்குரியராகச் செய்தல், உன் அருள் விளையாட்டு அன்றோ - நினது
திருவருள் விளையாட்டல்லவா? நேரிழை : அன்மொழித்தொகை. செய்தல்,
செய்யாமை, வேறொன்று செய்தல் என்பன முறையே கர்த்திருத்துவம்
அகர்த்திருத்துவம் அன்னிய தாகர்த்திருத்துவம் என்று கூறப்படும். மெய்
ஆற்றல் தக்க கருணை வள்ளல் நீயென்க. உய்தக் கோராதல் செய்கை
-உய்யத் தக்கோராகச் செய்வது. (36)
என்றக மகிழ்ச்சி
பொங்க வியம்பினா ளியம்ப லோடுங்
குன்றக நாட்ட வேடக் குழகனு மறைந்து வெள்ளி
மன்றக நிறைந்தான் மேக மறைந்திட மறைந்து செல்லும்
மின்றக விடாது பின்போம் விளங்கிழை மடந்தை யோடும். |
(இ
- ள்.) என்று அகம் மகிழ்ச்சி பொங்க இயம்பினாள் - என்று
மனக் களிப்பு மீக்கூரக் கூறியருளினார், இயம்பலோடும் - அங்ஙனம்
கூறியவளவில், குன்றகம் நாட்ட வேடக் குழகனும் - மலை நாட்டையுடைய
வேடனாகிய சோமசுந்தரக் கடவுளும், மறைந்து - திருவுருக்கரந்து, மேகம்
மறைந்திட மறைந்து செல்லும் மின்தக - முகில் மறைய உடன் மறைந்து
செல்லும் மின் போல, விடாது பின் போம் விளங்கு இழை மடந்தையோடும்
- விடாது பின் செல்லும் விளங்கிய அணிகளையுடைய உமைப்
பிராட்டியோடும், வெள்ளி மன்று அகம் நிறைந்தான் - வெள்ளியம்பலத்தில்
நிறைந்தருளினான்.
நேரிழை,
கருணை வள்ளல் நீ செய்கை உன் அருள்
விளையாட்டன்றோ என்று இயம்பினாள் என்க. குன்றக நாடு மலையின்
கண்ணுள்ள நாடு. நாட்ட, குறிப்புப் பெயரெச்சம். குழகன் - சுந்தரன். கரிய
வேட்டுருக் கொண்டு வந்தமையின் மேகத்தை உவமை கூறினார். மின்தக
|