- மின்னலையொக்க.
இறைவனுடன் இறைவி திருவுருக் கரந்தமைக்குக் கூறிய இவ்வுவமை மிகப் பாராட்டற்குரியது.
(37)
ஆததா யியுங்கண்*
டானா வற்புத மடைந்து கூடல்
நாதனார் நவின்ற வாற்றா னன்னெறி விரதச் செய்கை
மாதவ வொழுக்கந் தாங்கி வருமுறை மதிய மூன்றிற்
பாதகங் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவ மானான். |
(இ
- ள்.) ஆததாயியும் கண்டு ஆனாத அற்புதம் அடைந்து - மா
பாதகனும் அதனைப் பார்த்து நீங்காத வியப்பினை எய்தி, கூடல் நாதனார்
நவின்றவாற்றால் - மதுரை நாயகன் கூறியருளிய நெறியே, நல் நெறி விரதச்
செய்கை மாதவ ஒழுக்கம் தாங்கி வருமுறை - நல்வழிக் கேதுவாகிய விரதச்
செயலையும் பெரிய தவவொழுக்கத்தையும் மேற்கொண்டு செய்து
வருமுறைமையால், மதியம் மூன்றில் பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன
வடிவமானான் - மூன்று மாதங்களிலே பாதகமுற்றுந் தொலைந்து தெய்வத்
தன்மை பொருந்திய பார்ப்பன வடிவமாயினான்.
ஆததாயி
- கொடியோன்; நஞ்சிடுவார், தீக்கொளுவுவார் கருவியாற்
கொல்வார் முதலாயினோரை வடநூலார் ஆததாயிகள் என்ப; "கொலையிற்
கொடியாரை வேந் தொறுத்தல்" என்னுங் குறளுரையிற் பரிமேழலகர்
எழுதியிருப்பது நோக்குக. ஆதனாங்கது கண்டு என்பது பாடமாயின்
அறிவில்லான் அதனைக் கண்டு என்பது பொருளாகும். முன்னுள்ள
நிலைமையினும் உயர்ந்த நிலைமை எய்தினாளென்பார் 'தெய்வப் பார்ப்பன
வடிவ மானான்' என்றார். (38)
சொற்பதங் கடந்த வெந்தை சுந்தர நாதன் றாளிற்
பற்பல வடசொன் மாலை பத்தியிற் றொடுத்துச் சாத்தித்
தற்பர வறிவா னந்தத் தனியுரு வுடைய சோதி
பொற்பத மருங்கிற் புக்கான் புண்ணிய மறையோ னம்மா.
|
(இ
- ள்.) புண்ணிய மறையோன் - அங்ஙனம் புண்ணிய வடிவாகிய
அந்தணன், சொல் பதம் கடந்த எந்தை சுந்தரநாதன் தாளில் - சொல்லி
னெல்லையைக் கடந்த எம் தந்தையாகிய சோமசுந்தரக் கடவுள் திருவடியில்,
பற்பல வட சொல் மாலை பத்தியில் தொடுத்துச் சாத்தி - பற்பல
வடமொழியாலாகிய பாமாலைகளைப் பத்தியுடன் தொடுத்து அணிந்து, தற்பர
அறிவு ஆனந்தம் தனி உருவு உடைய சோதி - உண்மையறிவானந்த
மென்னும்ஒப்பற்ற திருவுருவையுடைய பரஞ்சுடராகிய சோமசுந்தரக் கடவுளின்,
பொன் பாதம் மருங்கில் புக்கான் - அழகிய திருவடியின் கண்ணே
கலந்தனன்.இறைவன் சொற்பதங் கடந்தா னாதலை,
"சொற்பதங்
கடந்த தொல்லோன்" |
என்று திருவாசகங்
கூறுதல் காண்க. வட நாட்டினனாகலின்
வடசொன் மாலை தொடுத்துச் சாத்தினனென்க. பத்தி - அன்பு. வரிசை.
தற்பரம் - உண்மை யென்னும் பொருட்டு. அம்மா : வியப்பிடைச் சொல். (39)
(பா-
ம்.) * ஆதனாங்கது கண்டு.
|