கண் வந்து தங்கி,
முனையவாள் பயிற்றி வாழ்வான் - கூர்மையுடைய
வாட்போர் விஞ்சையினைக் கற்பித்து வாழா நின்றான்.
கூர்த்த,
முனைய என்பன குறிப்புப் பெயரெச்சம். (2)
வாள்வினைக் குரவ னன்னான் வல்லமண் விடுத்த வேழந்
தோள்வினை வலியா லட்ட சுந்தர விடங்கன் றன்னை
ஆள்வினை யன்புந் தானும் வைகலு மடைந்து தாழ்ந்து
மூள்வினை வலியை வெல்லு மூதறி வுடைய னம்மா. |
 (இ
- ள்.) வாள்வினைக் குரவன் அன்னான் - வாட்டொழில் பயிற்றுங்
குரவனாகிய அம் முதியோன், வல் அமண் விடுத்த வேழம் - வலிய
சமணர்கள் ஏவிய யானையை, தோள்வினை வலியால் அட்ட சுந்தர விடங்கன் தன்னை - தமது
திருத்தோளின் போர்த் தொழில் வன்மையாற் கொன்றருளிய
அழகனாகிய சோமசுந்தரக் கடவுளை, வைகலும் - நாள்தோறும், ஆள்வினை
அன்பும் தானும் அடைந்து தாழ்ந்து இடையறாத அன்பும் தானுமாகச் சென்று
வணங்குதலால், மூள்வினை வலியை வெல்லும் மூதறிவு உடையன் -
மூண்டெழுகின்ற வினையின் வலியை வெல்லும் பேரறிவுடையனாகும். அமண் :
குழூஉப் பெயர். ஆள்வினை - முயற்சி; இடையறாமையை உணர்த்திற்று;
அடிமைத் தொழில். அம்மா : இடைச் சொல். (3)
கைவினை மறவாள் விஞ்சைக் காவல னவனைத் தாழ்ந்து
தெவ்வினை வெல்வான் கற்குஞ் சிங்கவே றனையார் தம்முள்
உய்வினை யுணராப் பாவி சித்தனென் றொருவ னுள்ளான்
அவ்வினை நிரம்பக் கற்றா னாகலூழ் வலியா லன்னான். |
 (இ
- ள்.) மறம் வாள் கைவினை விஞ்சைக் காவலன் அவனைத்
தாழ்ந்து - கொலைத் தொழிலையுடைய வாளினைக் கையிற் கொண்டு
பொரும் வித்தையில் வல்லனாகிய அம்முதியோனை வணங்கி,
தெவ்வினைவெல்வான் கற்கும் சிங்க ஏறு அனையார் தம்முள் - பகையை
வெல்லுமாறு வாள் வித்தை பயிலும் சிங்கவேற்றினை ஒத்த மாணவர் பலருள்,
உய்வினை உணராப் பாவி சித்தன் என்று ஒருவன் உள்ளான் - உய்யு
நெறியை அறியாத பாவியாகிய சித்தனென்று ஒருவனுளன்; அன்னான்
ஆகலூழ் வலியால் அவ்வினை நிரம்பக் கற்றான் - அவன் ஆகூழின்
வலியினால் அத் தொழிலைக் குறைவின்றிக் கற்றான்.
 தெவ்
- பகை; பகைவரை யுணர்த்திற்று. வெல்வான் : வினையெச்சம்.
உய்வு தீ வினையினின்றும் பிழைத்தல். ஆகலூழ் - அவ்விஞ்சை
பெருகுதற்குக் காரணமாகிய ஊழ்; "ஆகலூ ழுற்றக் கடை" என்பது
திருக்குறள். (4)
மானவாள் விஞ்சை யாலே தனைநன்கு மதிக்கத் தக்க
தானதோர் செருக்கி னாற்றன் னாசிரி யற்கு மாறாய்த்
தானுமோர் விஞ்சைக் கூடஞ் சமைத்துவாள் பலருங் கற்க
ஊனுலாம் படைவல் லானி லூதிய மிதப்பக் கொள்வான். |
|