II


144திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) மானவாள் விஞ்சையாலே - பெருமை பொருந்திய வாள்
வித்தையாலே, தனை நன்கு மதிக்கத்தக்கது ஆனது ஓர் செருக்கினால்
தன்னைப் பலரும் நன்கு மதிக்கத்தக்க திறமை பெற்றிருக்கும் ஓர்
செருக்கினால், தன் ஆசிரியற்கு மாறாய் - தன் குரவனுக்கு மாறாய், தானும்
ஓர் விஞ்சைக் கூடம் சமைத்து - தானும் ஒரு வித்தைக் கூடமமைத்து,
பலரும் வாள் கற்க - பலரும் வந்து வாள் விஞ்சை பயிலுமாறு (பயிற்றலால்),
ஊண் உலாம் படை வல்லானில் ஊதியம் மிதப்பக் கொள்வான் - புலால்
தங்கிய வாள் வல்லானாகிய ஆசிரியனிலும் ஊதியம் நிரம்பப்
பெறுவானாயினன்.

     வீரரது மானத்தை வாள்மேலேற்றிக் கூறிற்றுமாம். மதிக்கத்தக்க
தன்மை உண்டானதாலாகிய செருக்கென்க. விஞ்சைக் கூடத்தைச்
சிலம்பக்கூடம் என்று வழங்குவர். உலாம் - உலாவும்; பொருந்தும்.
மிதப்ப - மிக. (5)

ஒருத்தனே யிருவர் வாளின் விருத்தியு மொருங்கு கொள்ளுங்
கருத்தனாய் விருத்த னூரிற் கழிவது கருதி யன்னான்
வருத்துவா ளிளையர் தன்பால் வரமனந் திரித்து நாளும்
விருத்தமே செய்வான் றாயை விரும்பினோற் கிளையோ
                                          னன்னான்.

     (இ - ள்.) ஒருத்தனே இருவர் வாளின் விருத்தியும் ஒருங்கு
கொள்ளும் கருத்தனாய் - தான் ஒருவனே இருவரின் வாட்போர்
பயிற்றலால் வரும் ஊதியத்தையும் ஒரு சேர அடையும்
கருத்தினையுடையவனாய், விருத்தன் ஊரில் கழிவது கருதி - அம்
முதியோன் அவ்வூரினின்றும் நீங்குதல் கருதி, அன்னான் வருத்து
வாள் இளையர் தன்பால் வர - அவனுடைய வருத்துகின்ற
வாட்போர் பயிலும் மாணவர்கள் தன்னிடம் பயில வருமாறு, மனம்
திரித்து நாளும் விருத்தமே செய்வான் - அவர்கள் மனத்தை
வேறுபடுத்தி நாள்தோறும் பகைமையே செய்து வருவான்; தாயை
விரும்பினோற்கு இளையோன் அன்னான் - (அன்றியும் அவன்)
தாயை விரும்பிக் கூடிய மாபாதகனுக்கு இளையாள் போல்வானாய்.

     வாளின் விருத்தி - வாள் பயிற்றுதலாற் பெறும் நிவேதனம்.
இளையர் - இளம் பருவமுடையர்; வீரர் என்றுமாம். அன்னான் என்பது
எச்சமாய் வருஞ் செய்யுளிற் கேட்டுக் கேட்டகல்வான் என்பது கொண்டு
முடியும். (6)

தொடத்தொடப் பொறுக்குந் திண்மைத் கொன்னில மனையா                                           னில்லா
இடத்தவன் றேவி பாற்போ யிடனுண்டே யிடனுண் டேயென்
றடுத்தடுத் தஞ்சா தென்றுங் கேட்டுக்கேட் டகல்வா னாக
நடைத்தொழிற் பாவை யன்ன நங்கைவா ளாவி ருந்தாள்.*

     (இ - ள்.) தொடத் தொடப் பொறுக்கும் திண்மைத் தொல் நிலம்
அனையான் - தோண்டப் தோண்டப் பொறுக்குந் திண்ணிய பழமையாகிய
நிலத்தினைப் போலும் பொறுமையுடைய அவ்வாசிரியன், இல்லா இடத்து
அவன் தேவிபால் போய் - இல்லாதபொழுது அவன் மனைவியிடத்துச்
சென்று, இடன் உண்டே இடன் உண்டே என்று - சமயமுண்டோ


     (பா - ம்.) * வாளாதிருந்தாள்.