சமயமுண்டோ என்று,
என்றும் அடுத்து அடுத்து அஞ்சாது கேட்டு கேட்டு
அகல்வானாக - நாள்தோறும் அடுத்தடுத்துச் சிறிதும் அஞ்சாது கேட்டுக்
கேட்டு நீங்க, நடைத்தொழில் பாவை அன்ன நங்கை வாளா இருந்தாள் -
நடக்குந் தொழிலையுடைய பாவை போன்ற அம்மாதராள் ஒன்றும் பேசாது
சும்மா இருந்தாள்.
அடுக்குகள்
பன்மைப் பொருளில் வந்தன. தோண்டுந் தோறும்
பொறுக்கும் நிலம் போலும் பொறுமையென்னுங் கருத்தினை,
"அகழ்வாரைத்
தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை" |
என்னுந் திருக்குறளிற்
காண்க. இடன் - சமயம். ஏகாரம் வினா. நடைத்
தொழிற் பாவையன்னாள் என்றது இல் பொருளுவமம். (7)
பின்னொரு பகற்போய்ச் செங்கை பிடித்தனன் வலிப்பத் தள்ளி
வன்னிலைக் கதவ நூக்கித் தாழக்கோல் வலித்து மாண்ட
தன்னிலைக் காப்புச் செய்தா டனிமனக் காவல் பூண்டாள்
அந்நிலை பிழைத்த தீயோ னனங்கத்தீ வெதுப்பப் போனான். |
(இ
- ள்.) பின் ஒரு பகல் போய் செங்கை பிடித்தனன் வலிப்ப
பின்பு ஒரு நாள் சென்று அவள் சிவந்த கையைப் பிடித்து இழுக்க தனிமனக்
காவல் பூண்டாள் - ஒப்பில்லாத மனமாகிய காவலையுடைய அந்நங்கை,
தள்ளிவல் நிலைக்கதவம் நூக்கித் தாழக்கோல் வலித்து - அவனைப் புறம்பே
தள்ளி வலிய நிலையையுடைய கதவினைச் சாத்தித் தாழிட்டு, மாண்ட தன்
நிலை காப்புச் செய்தாள் - மாட்சிமைப்பட்ட தனது கற்பு நிலையைக்
காத்துக் கொண்டனள்; அந்நிலை பிழைத்த தீயோன் அனங்கத்தீ வெதுப்பப்
போனான் - அப்பொழுது தன் எண்ணம் தப்பிய அக்கொடியோன் காமத்
தீயானது சுடச் சென்றான்.
பிடித்தனன்
வலிப்ப - வலிதிற் பற்றியிழுக்க. தாழக்கோல் : தாழாகிய
கோல்; அக்குச் சாரியையென்று தொல்காப்பியரும், அகரம் சாரியையென்று
நன்னூலாரும் கூறுவர்;
"தாழென் கிளவி
கோலொடு புணரின்
அக்கிடை வருத லுரித்து மாகும்" |
என்பது தொல்காப்பியம்.
மனக்காவல் - மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துங்காவல்; இது நிறையெனப்படும்;
"சிறைகாக்குங்
காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங்
காப்பே தலை" |
என்பது திருக்குறள்.
பிழைத்த - தவறு செய்த என்றுமாம். (8)
|