(இ
- ள்.) நென்னல் வந்து மதுகைவாள் அமர்க்கு அறை கூவிப்
போன - நேற்று வந்து வலிய வாட்போருக்கு அறை கூவிச் சென்ற, முது
கடும் புலி ஏறு அன்ன - முதிய கடிய புலியேற்றினை ஒத்த, முடங்கு உடல்
குரவன் தானும் - வளைந்த உடலையுடைய (இறைவனாகிய) ஆசிரியனும்,
அதி்ர் கழல் வீக்கி - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்து, கச்சும் அமைத்து -
கச்சினையுங் கட்டி, வெள் நீறும் சாத்தி - வெள்ளிய திருநீற்றையுந் தரித்து,
கதிர் கொள்வாள் பலகை தாங்கிக் கயவனுக்கு எதிரே வந்தான் -
ஒளியினைக் கொண்ட வாளையும் கேடகத்தையும் கையிற்றாங்கி அக்கீழ்
மகனுக்கு எதிரே வந்தனள்.
அறை
கூவல் - போருக்கழைத்தல். உடம்பு முதிர்ந்தோனாயினும்
ஆண்மையிற் குன்றானென்பார் 'முதுகடும் புலியே றன்ன' என்றார். (15)
மடங்கலே றொன்றும் பைங்க ணரியொன்று மலைந்தா லென்ன
முடங்கல்வான் றிங்க ளொன்று முக்கணு நான்கு தோளும்
விடங்கலுழ் மிடறுந் தோற்றா வென்றிவாள் விஞ்சை வேந்தும்
அடங்கலன் றானு நேரிட் டாடம ராடல் செய்வார். |
(இ
- ள்.) மடங்கல் ஏறு ஒன்றும் பைங்கண் நரி ஒன்றும் மலைந்தால்
என்ன - சிங்க ஏறு ஒன்றும் பசிய கண்ணையுடைய நரி ஒன்றும் எதிர்த்துப்
போர் புரிந்தாற்போல, முடங்கல் வான் திங்கள் ஒன்றும் முக்கணும் நான்கு
தோளும் விடம் கலுழ் மிடறும் தோற்றா - வளைந்த வெள்ளிய பிறையும்
மூன்று கண்களும் நான்கு திருத்தோளும் நஞ்சக் கறை விளங்குந்
திருமிடறுமாகிய இவைகளைத் தோன்றாது மறைத்த, வென்றி வாள் விஞ்சை
வேந்தும் - வெற்றி பொருந்திய வாள் வித்தைக் கிறைவனும், அடங்கலன்
தானும் நேரிட்டு ஆடு அமர் ஆடல் செய்வார் - பகைவனாகிய சித்தனும்
எதிர்ந்து வெல்லும் போரினைச் செய்யயத் தொடங்கினர்.
மலைந்தாலென்ன
விஞ்சை வேந்தும் அடங்கலனும் ஆடல் செய்வா
ரென்க; மடங்க லேறுபோல் விஞ்சை வேந்தும், நரி போல் அடங்கலனும்
என நிரனிறை. (16)
எதிர்ப்பர்பின் பறிவர் நேர்போ யெழுந்துவா னேறு போல
அதிர்ப்பர்கே டகத்துட் டாழ்வுற் றடங்குவர் முளைப்பர் வாளை
விதிர்ப்பர்சா ரிகைபோய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர்
கொதிப்பர் போய் நகைப்ப ராண்மை கூறுவர் மாறி நேர்வர். |
(இ
- ள்.) எதிர்ப்பர் - ஒருவரையொருவர் எதிர்ப்பர்; பின்பறிவர் -
பி்ன் வாங்குவர்; நேர் போய் எழுந்துவான் ஏறுபோல அதிர்ப்பர் - (மீளவும்)
முன் சென்று மேலெழுந்து இடியேறு போல முழங்குவர்; கேடகத்துள்
தாழ்வுற்று அடங்குவர் - கேடகத்தினுள்ளே பதுங்கி மறைவர்; முளைப்பர் -
மீண்டு வெளிப்படுவர்; வாளை விதிர்ப்பர் - ஏந்திய வாளை அசைப்பர்;
சாரிகை போய் வீசி வெட்டுவர் - இடசாரி வலசாரியாகச் சென்று வாளை
வீசி வெட்டுவர்; விலக்கி மீள்வர் - அவ்வெட்டினை விலக்கித் திரும்புவர்;
கொதிப்பர் வெகுள்வர்; போய் நகைப்பர் - சென்று சிரிப்பர்; ஆண்மை
|