கூறுவர் - நெடு மொழி
கூறுவர், மாறி நேர்வர் - சாரிகை மாறி எதிர்ப்பர்.
பின்பறிதல்
- பெயர்தல்; பின் வாங்குதல். வீரரின் தொழிலியற்
கையைக் கூறுதலால் இது தொழிற்றன்மையணி.
(17)
வெந்நிடு வார்போற் போவர் வட்டித்து விளித்து மீள்வர்
கொன்னிடு வாண்மார் பேற்பர் குறிவழி பிழைத்து நிற்பர்
இந்நிலை நாலைங் கன்ன லெல்லைநின் றாடல் செய்தார்
அந்நிலை யடுபோர் காண்பா ரனைவருங் கேட்க வையன்.
|
(இ
- ள்.) வெந்நிடுவார் போல் போவர் - புறங்காட்டிச் செல்வார்
போலப் போவர்; வட்டித்து விளித்து மீள்வர் - சுழன்று போருக்கழைத்துத்
திரும்புவர், கொன் இடுவாள் மார்பு ஏற்பர் - அச்சத்தைத் தருகின்ற வாள்
வெட்டினைத் தமது மார்பின்கண் ஏற்பர்; குறிவழி பிழைத்து நிற்பர் - தாம்
கொண்ட இலக்கின் நெறி தவற நிற்பர்; இந்நிலை நாலைங் கன்னல் எல்லை
நின்று ஆடல் செய்தார் - இங்ஙனம் இருபது நாழிகை வரையும் நின்று
போர் புரிந்தனர்; அந்நிலை - அப்பொழுது, அடுபோர் காண்பார்
அனைவரும் கேட்க - கொல்லுதலையுடைய போரினைக் காண்போரனைவரும்
கேட்குமாறு, ஐயன் - இறைவன்.
வட்டித்தல்
- சுழலல். கொன் - அச்சம். பிழைத்து - தப்ப :
எச்சத்திரிபு; பகைவர் செய்யுங் குறி தப்பவென்க. கன்னல் - நாழிகை.
முதியோனாகி வந்ததற்கேற்ப இருபது நாழிகை வரை போர் செய்வதாக
நடித்தான் என்க. (18)
குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்துரை நாவைத் தொட்ட
கரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி யென்றென்
றுரைத்துரைத் தவற்றுக் கெல்லா முறுமுறை தண்டஞ்செய்து
சிரத்தினைத் தடிந்து வீட்டித் திருவுரு மறைந்து நின்றான். |
(இ
- ள்.) குரத்தியை நினைத்த நெஞ்சை - குருபத்தினியை விரும்பிக்
கருதிய உள்ளத்தையும், குறித்து உரை நாவை - அவளை நோக்கித் தகாத
மொழிகளைக் கூறிய நாவினையும்; தொட்ட கரத்தினை - பிடித்த கையையும்;
பார்த்த கண்ணை - விரும்பிப் பார்த்த கண்களையும் காத்தனை கோடி
என்று என்று உரைத்து உரைத்து - காத்துக் கொள்வாய் காத்துக் கொள்வாய்
என்று சொல்லிச் சொல்லி, அவற்றுக்கு எல்லாம் உறுமுறை தண்டம் செய்து -
அவ்வுறுப்புக்களுக்கெல்லாம் பொருந்துமாற்றால் ஒறுத்தலைச் செய்து,
சிரத்தினைத் தடிந்து வீட்டி - பின்பு தலையையறுத்துக் கீழே தள்ளி, திரு
உரு மறைந்து நின்றான் - திருவுருவம் மறைந்தருளினான்.
குரத்தி
- குரவனுக்குப் பெண்பால். காத்தனை : முற்றெச்சம்.
இப்பொழுது முறையே அவற்றைப் பிளத்தலும் அறுத்தலும் தடிதலும்
சூலுதலும் செய்ய நின்றேம் வல்லையேல் காத்துக் கொள்ளுதி என்றவாறு.
|