நெஞ்சு - உளத்திற்கு
நிலைக்களமாகிய மார்பு. ஒவ்வொன்றையும்
ஒறுக்குங்கால் இங்ஙனம் சொல்லிச் சொல்லியொறுத்தென்க. வீட்டி,
வீழ்த்தி யென்பதன் மரூஉ. (19)
போர்கெழு
களங்கண் டாருட் பொருபடைக் கேள்விச் செல்வர்
வார்கெழு கழற்கா லானைக் கண்டிலர் மனையற் றேடி
ஏர்கெழு கற்பி னாளை யெங்குற்றான் குரவ னென்னக்
கூர்கெழு வடிவேற் கண்ணாள் போயினார் கோயிற் கென்றாள். |
(இ
- ள்.) போர் கெழு களம் கண்டாருள் - போர் புரிதலைப்
பொருந்திய களத்தின்கண் நின்று (அப் போரினைப்) பார்த்தவர்களுள்ளே,
பொருபடைக் கேள்விச் செல்வர் - பொருதற்குரிய வாள் வித்தை பயிலும்
மாணாக்கர்கள், வார் கெழு கழல் காலானைக் கண்டிலர் - நெடிய வீரக்கழ
லணிந்த காலையுடைய குரவனைக் காணாது, மனையில் தேடி - இலலின்கண்
தேடிச் சென்று, ஏர் கெழு கற்பினாளை குரவன் எங்குற்றான் என்ன - அழகு
பொருந்திய கற்பினையுடைய குரத்தியை நோக்கி ஆசிரியன் எங்குச்
சென்றான்என்று வினவ, கூர்கெழு வடிவேல் கண்ணாள் - கூர்மை வாய்ந்த
வடித்த வேல் போன்ற கண்களையுடைய அந் நங்கை, கோயிற்குப்
போயினார் என்றாள் - திருக்கோயிலுக்குச் சென்றனர் என்று கூறினாள்.
களங்கண்டார்
- களப்போரின் வினோதங்கண்டு நின்றவர். கேள்விச்
செல்வர் - கேள்வியாகிய செல்வத்தையுடையவர்; மாணாக்கர். வாரிற் கோத்த
கழல் என்றுங் கூறுவர். கண்டிலர் : முற்றெச்சம். தேடிச் சென்று, கற்பினாளை
நோக்கி என ஏற்ற சொற்கள் வருவித்துரைக்க. (20)
என்றவப்
போதே கோயிற் கேகினான் மீண்டான் றேடிச்
சென்றவர் சித்தன் றன்னைச் செருக்களத் தடுபோர் செய்து
வென்றனை யேபின் னந்த வெங்களத் தெங்குந் தேடி
நின்றனைக் காணா திங்கு நேர்ந்தனம் யாங்க ளென்றார். |
(இ
- ள்.) என்ற அப்போதே கோயிற்கு ஏகினான் மீண்டான் - என்று கூறிய
அப்பொழுதே கோயிலுக்குச் சென்ற குரவன் திரும்பி வந்தனன்; தேடிச்
சென்றவர் - அவனைத் தேடிச் சென்ற மாணவர்கள், சித்தன் தன்னை
செருக்களத்து அடுபோர் செய்து வென்றனையே - (குரவனை நோக்கி)
சித்தனைப் போர்க்களத்திலே கொல்லும் போரினைப் புரிந்து வெற்றி
பெற்றாயே, பின் யாங்கள் நின்றனை அந்த வெங்களத்து எங்கும் தேடிக்
காணாது இங்கு நேர்ந்தனம் என்றார் - பின்பு யாங்கள் உன்னை அப்
போர்க்கள முழுதும் தேடிக் காணாமல் இங்கு வந்தோம் என்றார்கள்.
ஏகினான்
: வினையாலணையும் பெயர். வென்றனையே பின் எங்ஙன்
போந்தாயோ என விரித்துரைத்துக் கொள்க. நின்றனை, தன் சாரியை. (21)
|