II


154திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) தண்மதி வழிவந்தோனும் - குளிர்ந்த திங்களினது மரபில்
வந்தவனாகிய பாண்டியனும், நகர் உளார் தாமும் - நகரில் உள்ளோரும்,
பாதி விண்மதி மிலைந்த வேணி விடையவன் - வானிலுள்ள பாதி மதியினை
யணிந்த சடையையுடைய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுளின்,
ஆடல் நோக்கி - திருவிளையாடலை நோக்கி, கண்மலர் வெள்ளத்து
ஆழ்ந்து - கண்களாகிய மலரினின்று ஒழுகும் ஆனந்தவருவியாகிய
வெள்ளத்தில் முழுகி, கனைகழல் அடியில் தாழ்ந்து - ஒலிக்கின்ற
வீரக்கழலணிந்த திருவடியில் வணங்கி, பண்மலர் கீதம் பாடி ஆடினார்
பழிச்சி நின்றார் - பண் நிறைந்த இசைப்பாட்டுக்களைப் பாடி ஆடித்
துதித்து நின்றார்கள்.

     ஆடல் அடியார்க்கு எளிவரும் திருவிளையாடல். கீதம் இசைப்பாட்டு.
உவகையால் ஆடினாரென்க. (26)

[- வேறு]
அடியவருக் கெளியுரிவர் பரதேசி காவலரென் றடிவீழ்ந் தேத்தி
வடியயில்வேற் குலோத்துங்கன் மாணிக்க மாலையெனு மளையா
                                            ளோடுந்
தொடியணிதோண் முதுமகனை களிறேற்றி நகரைவலஞ் சூழ்வித்                                             திப்பால்
முடியணிவித் தனந்தகுண பாண்டியற்குத் தன்னிறைமை                                        முழுதுமீந்தான்.

     (இ - ள்.) அடியவருக்கு எளியர் இவர் - அடியார்க் கெளியராகிய
இச் சோமசுந்தரக் கடவுள், பரதேசி காவலர் என்று அடி வீழ்ந்து ஏத்தி -
தமக்கு ஓர் களைகண் இல்லாதவரைக் காத்தலில் வல்லவர் என்று அவர்
அடியில் வீழ்ந்து வணங்கித் துதித்து, வடி அயில் வேல் குலோத்துங்கன் -
வடித்த கூரிய வேற்படையேந்திய குலோத்துங்க பாண்டியன், தொடி
அணிதோள் முதுமகனை - வீரவளை அணிந்த தோளையுடைய முதியோனை,
மாணிக்க மாலையெனும் மனையாளோடும் - மாணிக்க மாலையென்று
கூறப்படும் அவன் மனைவியோடும், களிறு ஏற்றி நகரை வலம் சூழ்வித்து -
யானையின் மேல் ஏற்றி நகர் வலஞ் செய்வித்து, இப்பால் - பின்,
அனந்தகுணபாண்டியற்கு முடி அணிவித்து - தன் புதல்வனாகிய அனந்தகுண
பாண்டியனுக்கு முடிசூட்டி, தன் இறைமை முழுதும் ஈந்தான் - தனது
அரசுரிமை முழுதுங் கொடுத்தனன்.

     பரதேசி - வேற்று நாட்டவன். வேற்று நாட்டினின்றும் போந்து வேறு
களைகண் இலனாயிருந்த வாளாசிரியனைக் காத்தமையின் 'பரதேசி காவலர்'
என்றானென்க. முதுமகன் - முதியோனாகிய வாளாசிரியன். அவர்கள் தம்
பொருட்டு இறைவன் எளிவந்து அருள்புரியும் பேரன்புடையராயினமையின்
அவர்களைக் களிறேற்றி நகர் வலஞ் செய்வித்தானென்க. (27)

நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணமொரு                                     நெறியே செல்லப்
புலனெறிநீத் தருள்வழிபோய்ப் போதமாந் தன்வலியைப்                                      பொத்தி நின்ற
மலவலிவிட் டகலவரா வுமிழ்ந்தமதி போல்விளங்கி மாறி யாடுந்
தலைவனடி நிழல்பிரியாப் பேரின்பக் கதியடைந்தான் றமிழர்                                           கோமான்.