'சமண் வேடர்' என்றார்.
கொண்டு - உளங்கொண்டு என்றுமாம். மா இரு.
ஒரு பொருளிரு சொல். வஞ்ச வேள்வி - அபிசார யாகம். (4)
எல்லை காத
மளந்து சாலை யெடுத்த ழற்படு குண்டமுங்
கல்லி யாரழ லிட்டெ ழும்புகை கௌவி யெண்டிசை களுமுறச்
செல்ல வான வுடுக்க ளும்பொரி யிற்பொ ரிந்தன சிதறநீண்
டொல்லை தாவி விசும்பு தைவர வோட்டி* வெங்கனன் மூட்டினார். |
(இ
- ள்.) காத எல்லை அளந்து சாலை எடுத்து - ஒரு காத அளவு
அளந்து வேள்விச் சாலை கோலி, அழல்படு குண்டமும் கல்வி - தீவளர்க்கும்
வேள்விக் கிண்டழும் தோண்டி, ஆர் அழல் இட்டு - நிறைந்த தீயினை
அதிலிட்டு, எழும் புகை எண் திசைகளும் கௌவி உறச் செல்ல - எழுகின்ற
புகையானது எட்டுத் திசைகளையும் தன்னுட்படுத்தி மிகச் செல்லவும், வான
உடுக்களும் பொரிந்தன பொரியில் சிதற - வானின்கண் உள்ள
உடுக்கூட்டங்களும் பொரிந்து பொரி போற் சிந்தவும், நீண்டு ஒல்லை தாவி
விசும்பு தைவர - ஓங்கி விரைந்து தாவி வானுலகத்தைத் தடவவும்,
வெங்கனல் ஓட்டி மூட்டினார் - கொடிய நெருப்பினை எழுப்பி
மூட்டினார்கள்.
பொரிந்தன
: முற்றெச்சம். அழலிட்டு மூட்டினாரென்க. (5)
அத்த ழன்றெரி
குண்ட நின்று மகன்பி லத்தெழு வானெனப்
பைத்த துஞ்சிருள் வாயும் வாயிரு பாலும் வாலிய பகிர்மதிக்
கொத்து நஞ்சின+மொழுகு பற்களு மூழி யாரழல் விழிகளும்
வைத்த சைந்தொரு வெற்பு வந்தென வந்து ளானொரு தானவன். |
(இ
- ள்.) அத்தழன்று எரிகுண்டம் நின்றும் - அந்தக் கொதித்து
எரிகின்ற வேள்விக் குண்டத்தினின்றும், அகன்பிலத்து எழுவான் என
அகன்ற பிலத்தினின்றும் எழுகின்றவனைப் போல (எழுந்து), பைத்த இருள்
துஞ்சு வாயும் - பரந்த இருள் தங்கிய வாயினையும், வாய் இருபாலும் -
வாயின் இரண்டு பக்கங்களிலும், வாலிய பகிர்மதிக்கு ஒத்து - வெள்ளிய
அரைச்சந்திரனைப் போன்று, நஞ்சு இனம் ஒழுகு பற்களும் - நஞ்சின்
பெருக்கு ஒழுகுகின்ற பற்களையும், ஊழி ஆர் அழல் விழிகளும் வைத்து -
ஊழிக் காலத்தின் நிறைந்த தீயை உமிழும் கண்களையுங் கொண்டு, ஒரு
வெற்பு அசைந்து வந்தென - ஒரு மலை அசைந்து வந்தாற்போல, ஒரு
தானவன் வந்துளான் - ஓர் அவுணன் வந்தான்.
அக்
குண்டத்தினின்றும் வாயும் பற்களும் விழிகளும் கொண்டு ஒரு
தானவன் வந்தான் என்க. துஞ்சுதல் - தங்குதல், மதிக்கு ஒத்து -
மதியையொத்து : வேற்றுமை மயக்கம். வைத்து - கொண்டு என்னும்
பொருட்டு. இஃது இல் பொருளுவமையணி. (6)
(பா
- ம்.) * ஒட்டி. +கொத்த டுஞ்சினம்.
|