II


நாகமெய்த படலம்159



உதித்த செங்க ணரக்க வஞ்ச னுருத்தெ ழுந்தெரி வடவையிற்
கொதித்த டும்பசி தாக முங்கொடி தாலெ னக்கொடி யோரைநீர்
விதித்தி டும்பணி யாதெ னக்கென மீன வன்றனை மதுரையோ
டெதிர்த்தெ டுத்துவி ழுங்கி வாவென வேவி னாருட னேகினான்.

     (இ - ள்.) உதித்த செங்கண் அரக்க வஞ்சன் (அங்ஙனம்) தோன்றிய
சிவந்த கண்களையுடைய அவுணனாகிய கொடியோன், உருத்து எழுந்து -
வெகுண்டெழுந்து, எரி வடவையில் - எரிகின்ற வடவைத் தீயைப் போல,
கொதித்து அடும்பசி தாகமும் கொடிது என - பொங்கி வருத்துகின்ற பசியும்
நீர் வேட்கையும் கொடியவென்று, கொடியோரை நீர் விதித்திடும் பணி
எனக்கு யாது என - அக் கொடிய சமணர்களை (நோக்கி) நீவிர் எனக்கு
விதிக்கும் ஏவல் யாது என்று வினவ, மீனவன் தனை மதுரையோடு எதிர்த்து
விழுங்கிவா என ஏவினார் - பாண்டியனை மதுரையோடு எதிர்த்து எடுத்து
விழுங்கி வருவாயாக என்று விடுத்தனர், உடன் ஏகினான் - அவனும்
விரைந்து சென்றான்.

     பசியும் என உம்மை விரிக்க. கொடிது : பன்மையிலொருமை. ஆல் : அசை. (7)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
பாயுடை யவர்விட விடநாகப் படிவுகொ ணிசிசர னிலனண்டந்
தோயுட லினனுடல் விடமூறிச் சொரிதுளை யெயிறினன்                                       வடவைச்செந்
தீயுடை யனவென வெரிகண்ணன் றிணியிருள் வரைமுழை                                         யெனவிண்ட
வாயுடை யவனெடு நெறிமுன்னி மழைநுழை வரையென                                        வருகின்றான்.

     (இ - ள்.) பாய் உடையவர் விட - பாயினை உடையானவுடைய
சமணர்கள் ஏவ, விடநாகப் படிவுகொள் நிசிசரன் - நஞ்சினையுடைய
பாம்பின் வடிவினைக் கொண்ட அவுணன், நிலன் அண்டம் தோய்
உயலினன் - நிலவுலகினின்றும் அண்டத்தை அளாவும் உடலையுடையவனாய்,
உடல்விடம் ஊறிச் சொரிதுளை எயிறினன் - வருத்துகின்ற நஞ்சு சுரந்து
பொழியுந் துளையினையுடைய பற்களையுடையவனாய், வடவைச் செந்தீ
உடையன என எரி கண்ணன் - வடவைச் செந்தீயை உடையன என்று
சொல்ல எரிகின்ற கண்களையுடையவனாய், திணி இருள் வரை முழை என
விண்ட வாய் உடையவன் - இருள் செறிந்த மலையின் குகை போலத் திறந்த
வாயினையுடையவனாய், நெடுநெறி முன்னி - நீண்ட வழியில் முற்பட்டு, மழை
நுழை வரை என வருகின்றான் - முகில் தவழும் மலை போல வாரா
நின்றான்.

     நிசிசரன் - இரவிற் சரிப்போன்; அரக்கன். எயிற்றினன் எனற்பாலது
விகாரமாயிற்று. உடலினன், எயிறினன், கண்ணன், வாயுடையவன் என்னும்
குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. (8)