இருபதாவது
எல்லாம்வல்ல சித்தரான படலம்
|
சத்த நான்மறைப் பொருள்வரை தள்ளுநீண் முடிமேல்
வைத்த கார்கணான் மாடமாய் மதுரைமேல் வருணன்
உண்த்த மாரியைத் தடுத்தவா றுரைத்துமே றுயர்த்தோர்
சித்த ராய்விளை யாடிய செயல்சியி துரைப்பாம். |
(இ
- ள்.) சத்தம் நான மறைப்பொருள்
வரைதள்ளும் நீள்முடி மேல்
வைத்த - ஒலி வடிவாகிய நான்கு மறைகளின் பொருளினெல்லையைக் கடந்த
நீண்ட திருமுடியின்கண் வைத்த, கார்கள் நான் மாடமாய் - முகில்கள் நான்கு மாடங்களாகி,
மதுரைமேல் வருணன் உய்த்த மாரியைத் தடுத்தவாறு
உரைத்தும் - மதுரையின் மேல் வருணன் ஏவிய முகில்களை விலக்கிய
திருவிளையாடலைக் கூறினேம்; ஏறு உணர்த்தோர் - (இனி)
இடபக்கொடியையுணர்த்திய சொக்கலிங்க மூர்த்தி, சித்தராய விளையாடிய
செயல் சிறிது உரைப்பாம் - எல்லாம் வல்ல சித்தராகிய விளையாடிய
திருவிளையாடலைச் சிறிது கூறுவாம்.
மறைப்பொருள்
- மறை கூறும் பொருள், தள்ளுதல் - தாண்டி நிற்றல்,
மாடமாய்த் தடுத்தவாறு என்க, உரைத்ததும் : தனித்தன்மைப் பன்மை இறந்த
கால முற்று. அறிந்தவாறென்பார் சிறிது என்றார். (1)
தேட
ருங்கதிர் மணிமுடிச் செழியனும் பாண்டி
நாட ருந்திரு வெய்திமே னல்லவீ டெய்தக்
கூட லம்பதி மேவிய குணங்குறி கடந்த
வேட ரங்கொரு சித்தமெய் வேடராய் வருவார். |
(இ
- ள்.) தேடருங்
கதிர்மணி முடிச்செழியனும் - தேடிப்
பெறுதற்கரிய ஒளியினையுடைய மணிகளழுத்திய முடியினைத் தரித்த
அபிடேக பாண்டியனும், பாண்டி நாடரும் - பாண்டி நாட்டிலுள்ளவர்களும்,
திரு எய்திமேல் நல்ல வீடு எய்த - இம்மையிற் செல்வத்தை யடைந்து பின்பு
நல்ல வீடுபேற்றினை அடைய, கூடல் அம்பதி மேவிய - கூடலாகிய அழகிய
பதியில் எழுந்தருளிய, குணம் குறி கடந்த வேடர் - குணத்தையும் குறியையும்
கடந்த உருவினையுடைய பெருமான், அங்கு ஒரு சித்தமெய் வேடராய் வருவார் - அம்மதுரைப்
பதியில் ஒரு சித்தவடிவமாகிய
திருவேடமுடையவராய் வருவாராயினர்.
எய்த
வருவார் என்க. அம் : சாரியையுமாம். குணம் - முக்குணம்.
குறி - ஒருவன் ஒருத்தி ஒன்று என்னும் பால்வகை; குறிப்புமாம். கடந்த
வேடம் - சொரூபம். மெய் - வடிவு. (2)
|