II


160திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அரவிறை யுறைபிலம் வெளிகாண வரையுடல் புதைபட                                 நிலம்விள்ள*
வருவிழி+யழலெழ வுயிர்கான்முன் வளியுளர் கிளர்வலி                                 விளிவெய்தப்
பொருசின விழியெதிர் படுபைங்கூழ் புகையெழ வனமரை                                 பொரிபொங்கர்
கருகிட முதுசினை யிறைகொள்ளுங் ககநிரை சிறைசுருள்                                       படவீழ.

     (இ - ள்.) அரை உடல் புதைபட - பாதி உடல் புதைபடுதலாலே
அரவு இறை உறை பிலம் வெளி காண - பாம்புகளின் தலைவனாகிய
அனந்தன் உறையும் பாதலம் வெளியாகத் தெரியும்படி, நிலம் விள்ள -
நிலம் பிளக்கவும், விழி வரு அழல் எழ உயிர் கால் முன் - கண்களினின்று
வரும் நெருப்பு எழ உயிர்க்கின்ற பெருமூச்சின் முன், உளர்வளி கிளர்வலி
விளிவு எய்த - சலிக்கின்ற காற்றினது மிக்க வலியானது இறத்தலைப்
பொருந்தவும், பொரு சின விழி எதிர்படு பைங்கூழ் புகையெழ - மாறுபடும்
சினத்தினையுடைய விழிகளுக்கு எதிர்ப்பட்ட பயிர்கள் புகைந்து வாடவும்,
வனம் பொரி அரை பொங்கர் கருகிட - காடுகளும் பொருக்கினையுடைய
அடியினையுடைய மரச் செறிவுகளும் கருகவும், முதுசினை இறை கொள்ளும்
ககநிரை சிறை சுருள்பட வீழ - பெரிய மரக்கிளைகளில் வசிக்கும் பறவைக்
கூட்டங்கள் சிறைகள் கருகிச் சுருண்டு கீழே விழவும்.

     காற்றினால் நெருப்பு மூளுமாகலின் 'விழியழலெழ உயிர்கால்' என்றார்.
உளர் வலி என்றும், பொரி அரை என்றும் மாறுக. இறை கொள்ளும் -
தங்கும். ககம் - பறவை. (9)

அகனிலம் வெருவுற நிலனேந்து மரவிறை வெருவுற வெயில்                                       காலும்
பகன்மதி வெருவுற விவைகௌவும் பணிகளும் வெருவுற                                      வகறிக்கின்
புகர்மலை வெருவுற வடுதண்டப் புரவலன் வெருவுற                                      வருசெங்கண்
நகைமதி புரையெயிறவன்மாட நகரெதிர் குடவயின்                                      வருமெல்லை.

     (இ - ள்.) அகல் நிலம் வெருவுற - அகன்ற நிலவுலகம் அஞ்சவும்,
நிலன் ஏந்தும் அரவு இறை வெருவுற - அந்நிலத்தைத் தாங்கும் அரவரசன்
அசச்மெய்தவும், வெயில் காலும் பகல்மதி வெருவுற - கிரணத்தை வீசும்
சூரியனும் சந்திரனும் துணுக்குறவும், இவை கௌவும் பணிகளும் வெருவுற -
இவற்றை விழுங்கும் இராகு கேதுக்களாகிய பாம்புகளும் வெருவுற - இவற்றை
விழுங்கும் இராகு கேதுக்களாகிய பாம்புகளும் உட்கவும், அகல் திக்கின்
புகர்மலை வெருவுற - அகன்ற திசைகளிலுள்ள (முகத்திற்) புள்ளிகளையுடைய
மலை போன்ற யானைகள் அஞ்சவும், அடுதண்டப் புரவலன் வெருவுற -
கொல்லுகின்ற தண்டினை ஏந்திய கூற்றுவன் அஞ்சவும், வருசெங்கண்
நகைமதி புரை எயிறவன் - வருகின்ற சிவந்த கண்களையும் ஒள்ளிய (அரை)
மதியினை ஒத்த வளைந்த பற்களையுமுடைய அவுணன், மாடம் நகர் எதிர்
குட வயின் வரும் எல்லை - மாடங்கள் நிறைந்த மதுரைப் பதியின் நேரே
மேற்றிசைக்கண் வரும் பொழுதில்.


     (பா - ம்.) * விள்ளா. +வருவழி.