பகல்
- ஞாயிறு. வெயில்காலும் என்பது பகலுக்கு அடை; ஒளிப்
பொதுவாக்கி, மதிக்கும் ஏற்றலுமாம். புகர்மலை, யானைக்கு வெளிப்படை.
எயிறவன் : ஒற்றிரட்டாது நின்றது. (10)
கண்டவர்
கடிநகர் கடிதோடிக் கௌரிய னடிதொழு
தடிகேணங்
கொண்டல்கண் வளர்மதில் வளைகூடற் குடவயி னொருபெரு
விடநாகம்
அண்டமு மகிலமு மொருவாயிட் டயிறர வருவதை
யெனநீள்வாய்
விண்டுகொண் டணைவதை யெனலோடும் வெருவலன்
மதிகுல மறவீரன். |
(இ
- ள்.) கண்டவர் கடிநகர் கடிது ஓடி - (அதனைப்) பார்த்தவர்கள்
காவலையுடைய நகர்க்கண் விரைந்து ஓடி, கௌரியன் அடி தொழுது -
பாண்டியன் அடிகளை வணங்கி, அடி கேள் - அடிகளே, நம் கொண்டல்
கண்வளர் மதில்வளை - நமது முகில் உறங்கும் மதில் சூழ்ந்த, கூடல்
குடவயின் - மதுரைப்பதியின் மேற்றிசையில், ஒரு பெருவிடநாகம் - ஒரு
பெரிய நஞ்சினையுடைய பாம்பானது, அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு
அயில்தர வருவது என - அண்டங்களையும் மற்றெல்லாவற்றையும் ஒரு
வாயிற்போட்டு உண்ணுதற்கு வருவது போல, நீள் வாய் விண்டு கொண்டு
அணைவது எனலோடும் - பெரிய வாயைத் திறந்து கொண்டு வருகின்றது
என்று கூறவும், மதிகுல மறவீரன் வெருவலன் - திங்கள் மரபில் வந்த
வெற்றியையுடைய வீரனாகிய அனந்தகுணபாண்டியன் அது கேட்டு
அஞ்சானாயினன்.
அடிகேள்
- பெருமானீர். நம் கூடற்குடவயின் என்க. அயில வருவது
போல அணைவது என்றனர் என்னவும் என விரிக்க. வருவதை, அணைவதை
என்பவற்றில் ஐ : சாரியை. (11)
மற்றிது முனமத
கரிவிட்டோர் வரவிட வருவதை
யெனவெண்ணம்
உற்றிது தனையும் விளித்தற்கெம் முடையவர் விடையவர்
விட நாகஞ்
சுற்றிய சடையின ருளரென்னாச் சுரருல கிழிசுட ரெனநிற்குங்
கற்றளி யுடையுறை யிறைமுன்போய்க் கணைகழ லடிதொமு தறைகிற்பான்.
|
(இ
- ள்.) இது முனம் மதகரி விட்டோர் வரவிடவருவது என -
இப்பாம்பானது முன்னர் மதயானையை விடுத்த சமணர்கள் ஏவுதலால்
வருவதாகும் என்று, எண்ணம் உற்று - கருதி, இது தனையும் விளித்தற்கு -
இதனையும் கொல்லுதற்கு, எம் உடையவர் விடையவர் - எம்மை ஆளாக
உயைவரும் இடபவூர்தியினை உடையவரும், விடநாகம் சுற்றிய சடையினர்
உளர் என்னா - நஞ்சினையுடைய பாம்பினை அணிந்த சடையினை
யுடையவருமாகிய சோமசுந்தரக் கடவுள் இருக்கின்றாரென்று, சுரர் உலகு
இழிசுடர் என நிற்கும் கல்தளி இடை உறை இறை முன் போய் -
தேவருலகினின்றும் இறங்கிய சூரியனைப் போல நிற்கும் மாணிக்க
விமானத்தில் எழுந்தருளிய இறைவன் திருமுன் சென்று, கனைகழல்
அடிதொழுது அறைகிற்பான் - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடியை
வணங்கிக் கூறுகின்றான்.
|