II


162திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     மற்று : அசை நிலை. வருவதை. ஐ : சாரியை. விளித்தல் -
இறப்பித்தல்; விளிதல் என்பதன் பிறவினை. உடையவர் விடையவர்
சடையினர் என ஒரு பொருள் மேற் பல பெயர் வந்தன. சுடரென நிற்கும்
என்றமையால் கல் என்பது மாணிக்கத்தை உணர்த்துவதாயிற்று. தளி -
கோயில்; விமானம். (12)

வழிவழி யடிமைசெய் தொருபோது மறவலன் வழிபடு                                       மடியேனின்
மொழிவழி முறைசெய்து வருவேனிம் முதுநக ரடையவு                                       மமணீசர்
அழிவது கருதினர் விடுநாக மடைவது னருள்வழி யதனாவி
கழிவது கருதிய வடியேனைக் கருணைசெய் தருளிது                                       கடனென்றான்.

     (இ - ள்.) வழி வழி அடிமை செய்து - வழி வழியாகத் தொண்டு
பூண்டு, ஒரு போதும் மறவலன் வழிபடும் அடியேன் - ஒரு பொழுதும்
மறவாது வழிபடுகின்ற அடியேன், நின் மொழி வழி முறை செய்து வருவேன்
- நின் ஆணை வழியே ஆட்சி புரிந்துவாரா நின்றேன், அமண் நீசர் -
சமணராகிய கீழோர். இம்முது நகர் அடையவும், அழிவது கருதினர்
விடுநாகம் அடைவது - இந்தகத் தொன்னகர் முழுதும் அழிவதைக் கருதி
விடுத்த பாம்பு வாரா நின்றது; உன் அருள் வழி அதன் ஆவி கழிவது
கருதிய அடியேனை - உனது திருவருளின் நெறியே அதன் உயிர்
போவதைக் கருதிய அடியேனுக்கு, கருணை செய்தருள் இது கடன்
என்றான் - அருள் பாலிப்பாயாக இது நினது கடனாகும் என்று
குறையிரந்தான்.

     மொழி - வேதம் முதலியன. அடையவும் - முழுதும். மறவலன்,
கருதினர் என்பன முற்றெச்சம். அழவது, கழிவது என்பன தொழிற் பெயர்.
அடியேனை - அடியேனுக்கு. (13)

அனுமதி கொடுதொழு திறைபாத மகமதி* கொடுபுற                                       னடைகின்ற
பனிமதி வழிவரு தமிழ்மாறன் பகழியொ டடுசிலை                                       யினனேகிக்
குனிமதி தவழ்தரு மதினீடுங் கொடியணி குடகடை                                       குறுகாமுன்
தனிவரை யெனநிகர் தருகோபத் தழல் விழி யரவினை                                    யெதிர்கண்டான்.

     (இ - ள்.) அனுமதி கொடு - அருள் பெற்றுக் கொண்டு, தொழுது -
வணங்கி, இறை பாதம் அகம் மதிகொடு - இறைவனது திருவடியை
உள்ளத்திற் சிந்தித்தலொடு, புறன் அடைகின்ற புறத்தே வருகின்ற, பனிமதி
வழிவரு தமிழ் மாறன் - தண்ணிய சந்திரன் மரபில் வந்த தமிழ்
வேந்தனாகிய அனந்தகுண பாண்டியன், பகழியொடு அடுசிலையினன் ஏகி -
கணையுடன், கொல்லுதற்குரிய வில்லையுடையவனாய்ச் சென்று, குனிமதி
தவழ் தருமதில் - வளைந்த மதி தவழுகின்ற மதிலினது, நீடும் கொடி அணி
குடகடை குறுகாமுன் - நெடிய கொடி கட்டிய மேற்கு வாயிலை அடைதற்கு
முன்னரே, தனிவரை என நிகர்தரு கோபத்தழல் விழி அரவினை எதிர்
கண்டான் - ஒப்பற்ற மலையென்று சொல்லுமாறு எதிர்ந்த சினத்தீ சிந்தும்
விழியினையுடைய பாம்பினை நேரே கண்டனன்.


     (பா - ம்.) * அகமதிற் கொடு.