II


நாகமெய்த படலம்163



     அனுமதி - உடன்பாடு; அரவினைக் கொல்லுதற்கு இறைவன்
அருளிப்பாடு. மதிகொடு - மதித்தல் கொண்டு; சிந்தித்து. அடைகின்ற
மாறன் ஏகிக் குறுகாமுன் என்க. நிகர்தரு - எதிர்ந்த;

"நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு"

என்பது தொல்காப்பியம். (14)

[எழுசீரடியாசிரிய விருத்தம்]
பல்பொறிப் பகுவாய்ப் படம்புடை பரப்பிப்
     பக்கமெண் டிசையொடு விசும்பிற்
செல்கதிர் புதைத்துத் திணியிருள் பரப்பித்
     திங்களின் பகிர்புரை நஞ்சம்
பில்கெயி றதுக்கிப் பெரிதுயிர்த் தகல்வாய்
     பிளந்துமா நகரெலா மொருங்கே
ஒல்லெனக் கௌவி விழுங்குவான் சீறி
     யுருத்தன னுரகவா ளவுணன்.

     (இ - ள்.) உரகவாள் அவுணன் - பாம்பின் வடிவாகிய கொடிய
அவுணன், பல்பொறிப் பகுவாய்ப் படம்புடை பரப்பி - பல பொறிகளையும்
பிளந்த வாயையுமுடைய படங்களைப் பரப்பி, பக்கம் எண் திசையொடு -
எட்டுத் திக்குகளாகிய பக்கங்களோடு, விசும்பில் செல் கதிர் புதைத்து -
வானிற் செல்லுகின்ற சூரியனையும் மறைத்து, திணி இருள் பரப்பி - செறிந்த
இருளை விரித்து, திங்களின் பகிர்புரை - சந்திரனது பிளவினை ஒத்த, நஞ்சம்
பில்கு எயிறு அதுக்கி - நஞ்சினை உமிழும் பல்லினை அதுக்கி, பெரிது
உயிர்த்து - பெருமூச்சு விட்டு அகல் வாய் பிளந்து - அகன்ற வாயைப்
பிளந்து, மாநகர் எலாம் ஒருங்கே ஒல்லெனக் கௌவி விழுங்குவான் -
பெரிய நகர் முழுதையும் ஒரு சேர விரைந்து கௌவி விழுங்குதற்கு, சீறி
உருத்தனன் - சீறிச் சினந்தான்.

     ஒல்லென : விரைவுக் குறிப்பு. விழுங்குவான் : வினையெச்சம். (15)

அடுத்தன னரச சிங்கவே றிடியே
     றஞ்சவார்த் தங்கையிற் சாபம்
எடுத்தன னெடுநா ணிருதலை வணக்கி
     யெரிமுகக் கூாங்கணை தொடுத்து
விடுத்னன் விடுத்த சரமெலா முரகன்
     வெறுந்துகள் படக்கறித் துமிழ்ந்து
படுத்தனன் பொறாது பஞ்சவன் புராரி
     பங்கயச் சேவடி நினையா.

     (இ - ள்.) அரச சிங்க ஏறு அடுத்தனன் இடி ஏறு அஞ்ச ஆர்த்து -
அரசருள் ஆண் சிங்கம் போன்ற பாண்டியன் நெருங்கி இடியேறும் அஞ்சப்
பெருமுழக்கம் செய்து, அங்கையில் சாபம் எடுத்தனன் நெடு நாண் இருதலை
வணக்கி - அழகிய கையில் வில்லை எடுத்து நீண்ட நாணினால்