(அவ்வில்லின்) இரண்டு
தலையையும் வளைத்து, எரிமுகக் கூர்ங்கணை
தொடுத்து விடுத்தனன் - கூரிய தீ முகக் கணைகளைப் பூட்டி விடுத்தனன்;
விடுத்த சரம் எலாம் - (அங்ஙனம்) விடப்பட்ட கணைகளனைத்தையும்,
உரகன் வெறுந்துகள்படக் கறித்து உமிழ்ந்து படுத்தனன் - பாம்பின் வடிவாய
அவுணன் வெறிய தூளாமாறு கடித்து உமிழ்ந்து சிதைத்தான்; பஞ்சவன் -
(அதனைக் கண்ட) பாண்டியன், பொறாது - மனம் பொறாமல், புராரி பங்கயச்
சேவடி நினையா - சோம சுந்தரக் கடவுளின் தாமரை மலர் போன்ற சிவந்த
திருவடிகளைச் சிந்தித்து.
எடுத்து
வணக்கி நாணிலே கணை தொடுத்து என்றுமாம். அடுத்தனன்,
எடுத்தனன் என்பன முற்றெச்சம். புராரி - புரப்பகைவன்; முப்புரங்களை
யெரித்தவன். (16)
கொடியதோர்
பிறைவா யம்பினை விடுத்துக்
கோளரா வளையுட றுணித்தான்
இடியதோ வெனவார்த் தெரிநிறக் குருதி
யிரங்கிவீ ழருவியிற் கவிழ
நெடியதோ ருடலம் புரள்படக் கூர்வா
னெளிதர விளிபவன் மேலைக்
கடியதோ ரால காலவெள் ளம்போற்*
கக்கினான் கறையிரு ணஞ்சம். |
(இ
- ள்.) கொடியது ஓர் பிறை வாய் அம்பினை விடுத்து -
கொடியதாகிய ஒரு பிறை போலும் வாயினையுடைய கணையை எவி, கோள்
அரா வளை உடல் துணித்தான் - வலிய பாம்பினது நெளிந்த உடலைத்
துண்டுபடுத்தினான்; இடியதோ என ஆர்த்து - இடியொலியோ என்று ஐயுறப்
பேரொலி செய்து, எரி நிறக்குருதி - தீயின் நிறம் போன்ற குருதி, இரங்கி
வீழ் அருவியில் கவிழ - ஒலித்து வீழ்கின்ற அருவி போல ஒழுகவும்,
நெடியது ஓர் உடலம் புரள்பட - நீண்டதாகிய ஒப்பற்ற உடல் புரளவும்,
கூர்வால் நெளிதர - கூரியவால் நெளியவும், விளிபவன் - இறக்கின்ற
அவ்வவுணன், மேலைக் கடியது ஓர் ஆலகால வெள்ளம் போல் -
முன்னாளிற்றோன்றிய கடியதாகிய ஒப்பற்ற ஆலகால நஞ்சின் பெருக்குப்
போல், கறை இருள் நஞ்சம் கக்கினான் - கரிய இருள் போன்ற நஞ்சினைக்
கக்கினான்.
இடியதோ,
அது : பகுதிப் பொருள் விகுதி. கொடியது, நெடியது,
கடியது என்பன எச்சமாயின. ஓர் என்பன அசைகளுமாம். ஆர்த்து
விளிபவன் கக்கினான் என்க. (17)
தீவிட முருத்துத்
திணியிருள் கடுப்பத்
திருநக ரெங்கணுஞ் செறிந்த
காவிடங் கூவல் கயந்தலை சதுக்கங்
கழகமா வணமக ழிஞ்சி |
(பா
- ம்.) * ஆலாகல வெள்ளம்போலக்.
|