II


நாகமெய்த படலம்165



கோவிட மாட முபரிகை மேடை
     கோபுர மரங்கெலாம் பரந்து
தாவிட மயங்கி யுறங்கினார் போலச்
     சாம்பினார் தனிநகர் மாக்கள்.

     (இ - ள்.) தீவிடம் உருத்து - அந்தக் கொடிய நஞ்சானது சினந்து
திணி இருள் கடுப்ப - செறிந்த இருள் பரவியதைப் போல, திருநகர்
எங்கணும் - அழகிய நகர் முழுதும், செறிந்த கா இடம் - நெருங்கிய
சோலைகளும், கூவல் கயந்தலை - கிணறும் குளமும், சதுக்கம் கழகம்
ஆவணம் - நாற்றெருக் கூடுமிடமும் கல்விக் கழகமும் கடை வீதியும்,
அகழ் இஞ்சி - அகழியும் மதிலும், கோ இடம் அரசன் மாளிகையும், மாடம்
உபரிகை மேடை கோபுரம் அரங்கு - மாடமும் உப்பரிகையும் மேடையும்
கோபுரமும் நாட்டிய சாலையும், எலாம் பரந்து தாவிட - ஆகிய
எல்லாவிடங்களிலும் பரந்து தாவுதலால், தனிநகர் மாக்கள் - ஒப்பற்ற அந்
நகரிலுள்ள மாந்தர்கள், மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் - நஞ்சினால் மயங்கி உறங்கினவர்கள் போல வாடினார்கள்.

     விடம் உருத்து இருள் கடுப்ப நகர் முழுதும் எல்லாவிடங்களிலும்
பரந்து தாவிட என்க. ஆலாலத்தால் உறங்கிய வானோர் போல
என்றுரைப்பாருமுளர். (18)

நிலைதளர்ந் துடலந் திமிர்ந்துவேர் வரும்பி
     நிறைபுலன் பொறிகர ணங்கள்
தலைதடு மாறி யுரைமொழி குழறித்
     தழுதழுப் படைந்துநா வுணங்கி
மலைதரு கபமே னிமிர்ந்துணர் வழிந்து
     மயங்கிமூச் சொடுங்கியுள் ளாவி
அலைதர வூச லாடினார் கிடந்தா
     ரன்னதொன் னகருளா ரெல்லாம்.

     (இ - ள்.) நிலைதளர்ந்து உடலம் திமிர்ந்து வேர்வு அரும்பி - நிலை கெட்டு உடல் கம்பித்து வெயர்வை தோன்றி, நிறை புலன் பொறி கரணங்கள்
தலை தடுமாறி - நிறைந்த புலன்களும் பொறிகளும் அந்தக் கரணங்களும்
தலை தடுமாறி, உரைமொழி குழறி தழுதழுப்பு அடைந்து நா உணங்கி -
உரைக்கின்ற மொழிகள் குழறி நாத் தழுதழுப்புற்றுக் காய்ந்து, மலைதரு கபம்
மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து - பொருகின்ற கபம் மேலோங்கி
அறிவழிந்து, மயங்கி மூச்சு ஒடுங்கி - மயங்கி உயிர்ப்பு அடங்கி, உள் ஆவி
அலைதர - உள்ளேயுள்ள உயிர் அலைய, அன்னதொல் நகர் உளார் எல்லாம் ஊசல் ஆடினார் கிடந்தார் - அப் பழைய நகரிலுள்ளாரனைவரும் ஊஞ்சல்
போல ஆடிக் கிடந்தனர்.

     உடலம், அம் : சாரியை. தலை தடுமாறி - தடுமாற்றமுற்று; ஒரு சொல்.
உரைமொழி, வினைத்தொகை. ஆடினார் : முற்றெச்சம். (19)