தென்னவன் விடங்கண்
டஞ்சுமால் போலச்
சினகர மடைந்துதாழ்ந் தெந்தாய்
முன்னவ வாதி முதல்வ வித்தின்றி
முளைத்தவ முடிவிலா முனிவ
என்னவ வன்பர்க் கெளியவ யார்க்கு
மிறையவ விந்நகர்க் கென்றும்
மன்னவ வனாதி மறையவ முக்கண்
வானவ நினைச்சர ணடைந்தேன். |
(இ
- ள்.) தென்னவன் - அனந்த குணபாண்டியன், விடம் கண்டு
அஞ்சும் மால் போலச் சினகரம் அடைந்து - ஆலால விடத்தைக் கண்டு
அஞ்சிய திருமால் போலத் திருக்கோயிலை அடைந்து, தாழ்ந்து - வணங்கி,
எந்தாய் - எந்தையே, முன்னவ - யாவர்க்கும் முற்பட்டவனே, ஆதி முதல்வ
- ஆதியாகிய முதல்வனே, வித்து இனறி முளைத்தவ - மூலமின்றித்
தோன்றியவனே, முடிவு இலா முனிவ - இறுதியில்லாத முனிவனே, என்னவ
- எனக்குரிமையானவனே, அன்பர்க்கு எளியவ - அன்பர்கட்கு எளியவனே,
யார்க்கும் இறையவ - எல்லோருக்குந் தலைவனே, இந்நகர்க்கு என்றும்
மன்னவ - இம் மதுரைப் பதிக்கு எக்காலத்திலும் மன்னவனே, அனாதி
மறையவ - அனாதியாயுள்ள மறையவனே, முக்கண் வானவ - மூன்று
கண்களையுடைய தேவனே நினைச் சரண் அடைந்தேன் - நின்னைப்
புகலாக அடைந்தேன்.
விடங்கண்டஞ்சிய
திருமால் திருககைலையை அடைந்து சரண்புக்
காற்போல என்க. அருகன் கோட்டம் என்னும் பொருளுள்ள சினகரம்
என்னும் பெயர் பின் பொதுப்படக் கோயிலைக் குறிப்பதாயிற்று. என்னவ -
எனக் குரிமையுடையவனே; "அப்பனீ அம்மைநீ" என்னும் திருத்தாண்டகம்
முதலியவற்றுள் இறைவன் தமக்குரிமையுடையார் பலராகவும் கூறப்படுதல்
காண்க; என் நவ எனப் பிரித்து, எனக்குப் புதுமையை விளைப்பவனே
என்று பிறர் கூறுவாராயினர். (20)
அடுத்துவந் தலைக்கு மாழியைத் துரந்து
மாழியுண் டேழுமொன் றாகத்
தொடுத்துவந் தலைக்கும் பெருமழை தடுத்துந்
துளைக்கைவிண் டுழாவவெண் பிறைக்கோ
டெடுத்துவந் தலைக்குங் களிற்றினை விளித்து
மிந்நகர் புரந்தனை யின்று
மடுத்துவந் தலைக்கும் விடத்தினான் மயங்கும்
வருத்தமுங் களைதியென் றிரந்தான். |
(இ
- ள்.) அடுத்து வந்து அலைக்கும் ஆழியைத் துரந்தும் -
நெருங்கி வந்து வருத்துங் கடலைச் சுவறச் செய்தும், ஆழி உண்டு ஏழும்
ஒன்றாகத் தொடுத்து வந்து அலைக்கும் பெருமழை தடுத்தும் - கடல் நீரைப்
பருகி
|