ஏழு மேகங்களும் ஒன்றாகத்
திரண்டு வந்து பெய்து வருத்தும்
பெருமழையைத் தடுத்தும், துளைக்கை விண்துழாவ - துளையையுடைய
துதிக்கை வானைத் தடவுமாறு, வெண்பிறைக் கோடு எடுத்து வந்து
அலைக்கும் களிற்றினை விளித்தும் - வெள்ளிய பிறை போன்ற
கொம்பினிடையே மேலெடுத்து வந்து வருத்தும் யானையைக் கொன்றும்,
இந்நகர் புரந்தனை - இந்த நகரத்தைப் பாதுகாத்தனை, இன்று மடுத்து வந்து
அலைக்கும் - இப்பொழுது அகப்படுத்து வந்து வருத்துகின்ற, விடத்தினால்
மயங்கும் வருத்தமும் களைதி என்று இரந்தான் - நஞ்சினாலே மயங்குகின்ற
வருத்தத்தையும் நீக்கியருள்வாயென்று வேண்டினான்.
ஏழ்
: தொகைக் குறிப்பு. துளைக்கையெடுத்து வந்தென்க விளித்து
- விளியச் செய்து; பிறவினை. மடுத்து - நகரினை அகப்படுத்தி இன்றும்
அடுத்து எனப் பிரிப்பாருமுளர். முன்னுண்டாகிய துன்பங்களையெல்லாம்
போக்கி இந்நகரைக் காத்தருளிய நீயே இப்பொழுதும் இத்துன்பத்தினின்றும்
காக்கற் பாலையென வேண்டினான். (21)
அருட்கட லனைய
வாதிநா யகன்ற
னவிர்சடை யணிமதிக் கொழுந்தின்
பெருக்கடை யமுதத் தண்டுளி சிறிது
பிலிற்றினான் பிலிற்றிட லோடும்
பொருக்கென வெங்கும் பாலினிற் பிரைபோற்
புரையறக் கலந்துபண் டுள்ள
திருக்கிளர் மதுரா நகரமாப் புனிதஞ்
செய்ததச் சிறுதுளி யம்மா. |
(இ
- ள்.) அருள் கடல் அனைய ஆதி நாயகன் - கருணைக்
கடலனைய ஆதி நாயகனாகிய சோம சுந்தரக் கடவுள், தன் அவிர் சடை
அணிமதிக் கொழுந்தின் - தனது விளங்கா நின்ற சடையின்கண் அணிந்த
இளம்பிறையினது, பெருக்கு அடை அமுதத்தண் துளி சிறிது பிலிற்றினான்
- பெருக்கமைந்த அமுதத்தின் தண்ணிய துளியிற் சிறிது சிந்தினான்;
பிலிற்றிடலோடும் - அங்ஙனம் சிந்தியவளவில், அச்சிறு துளி - அந்தச்
சிறிய திவலையானது, பொருக்கென பாலினில் பிரைபோல் எங்கும் புரை
அறக்கலந்து - விரைந்து பாலிற் பிரைபோல எவ்விடத்துங் குற்றமறக் கலந்து,
பண்டு உள்ள திருக்கிளர் மதுரா நகரம் ஆக - முன்னுள்ள செல்வமிக்க
மதுரை நகர் ஆகுமாறு, புனிதம் செய்தது - தூய்மை செய்தது.
புரையற
- இடைவெளியின்றி என்றுமாம். முன்பு மதிக்கலையின்
அமிழ்தாற் சாந்தி செய்யப் பெற்று அதனால் மதுரையெனப்
பெயரெய்தினமை திருநகரங்கண்ட படலத்துட் கூறப்பட்டது; இப்பொழுதும்
அவ்வமிழ்தால் நஞ்சினைப் போக்கித் தூய்மை செய்தமையின் பண்டுள்ள
மதுரா நகரமா என்றார். அம்மா : வியப்பிடைச்சொல். (22)
|