வட்ட வார்சடைக் குஞ்சியும் பூணநூன் மார்பும்
இட்ட நீறணி திலகமு மிணைக்குழை தூங்க
விட்ட வெள்ளைமுத் திரையுந்தோல் விரித்தபட் டிகையுஞ்
சுட்ட வெண்பொடிப் பொக்கணந் தூக்கிய தோளும். |
(இ
- ள்.) வட்டம் வார் சடைக் குஞ்சியும் - வட்டமாகக் கட்டிய
நீண்ட சடையாகிய சிகையும், பூணநூல் மார்பும் - பூணூலணிந்த திருமார்பும்,
இட்ட நீறு அணி திலகமும் - தரித்த திருநீற்றின்மேல் அணிந்த திலகமும்,
இணைக் குழை தூங்கவிட்ட வெள்ளை முத்திரையும் - இரண்டாகிய
குண்டலங்களுடன் தொங்கவிட்ட வெள்ளிய தோடுகளும், தோல்விரித்த
பட்டிகையும் - தோலாகிய விரித்த அரைப் பட்டிகையும், சுட்ட வெண்பொடிப்
பொக்கணம் தூக்கிய தோளும் - நீற்றிய திருநீற்றினையுடைய பையைத்
தொங்க விட்ட தோளும்.
பூணனூல்,
அ : அசை; பூணநூல் என்பது பாடமாயின் பூணுதலை
யுடைய நூல் என்ப. முத்திரை - அடையாளமாகிய தோடு; வெள்ளை
முத்திரை - சங்காலாகிய தோடு. பொக்கணம் - திருநீற்றுப்பை. (3)
துய்ய வெண்பொடி
யழிந்துமெய் சிவந்திடச் சுவடு
செய்யும் வெண்டிரட் படிகநீண் மாலையுஞ் சிவந்த
கையி லங்குகட் டங்கமுங் கண்டவர் மனஞ்சென்
றுய்ய வன்புற வீக்கிய வுதரபந் தனமும். |
(இ
- ள்.) துய்ய வெண்பொடி அழிந்து மெய் சிவந்திட - தூய திருநீறு
அழிந்து திருமேனி சிவக்குமாறு, சுவடுசெய்யும் - தழும்பினைச் செய்யும்,
வெண்திரள் படிகம் நீள் மாலையும் - வெள்ளிய திரண்ட படி கத்தாலாகிய
நீண்ட மாலையும், சிவந்த கை இலங்கு கட்டங்கமும் - சிவந்த திருக்கரத்தில்
விளங்கும் மழுப்படையும், கண்டவர் மனம் சென்று உய்ய வன்புற வீக்கிய
உதரபந்தனமும் - தரிசித்தோர் உள்ள மானது சென்று பதிந்து உய்தி கூடச்
சிக்கெனக் கட்டிய உதரபந்தனமும்.
திருநீறு
அழிதலால் மெய்யின் சிவப்புத் தோன்றுமாறு என்க.
கட்டங்கம் - மழு;
"சுத்திய பொக்கணத்
தென்பணி கட்டங்கம்" |
என்னும் திருச்சிற்றம்பலக்
கோவையார் உரையை நோக்குக. (4)
அட்ட வேங்கையீ ருரிவைகீண் டசைத்தகோ வணமும்
ஒட்ட வீக்கிய புலியத ளுடுக்கையு மிடத்தோள்
இட்ட யோகபட் டிகையும் பொன் னிடையிடை கட்டப்
பட்ட சுஃறொலி வேத்திரப் படைக்கையும் படைத்து. |
(இ
- ள்.) அட்ட வேங்கை ஈர் உரிவை கீண்டு அசைத்த
கோவணமும் - கொன்ற வேங்கையினின்றும் உரித்த தோலைக் கிழித்துக்
கட்டிய
|