குண்ட ழற்கணின் றெழுந்தவக் கொடியவெம் பசுவைப்
பண்டு போலவர் விடுத்தனர் கூடலம் பதிமேல்
உண்டு மில்லையு மெனத்தடு மாற்றநூ லுரைத்த
பிண்டி யானுரை கொண்டுழல் பேயமண் குண்டர். |
(இ
- ள்.) குண்டு அழல்கண் நின்று எழுந்த அக் கொடிய வெம்
பசுவை - வேள்விக் குண்டத்தின் தீயினின்றுந் தோன்றிய அந்தக் கொடிய
பசுவினை, கூடலம் பதிமேல் - மதுரைப் பதியின் மேல், உண்டும் இல்லையும்
என தடுமாற்ற நூல் உரைத்த பிண்டியான் - அத்தி நாத்தி என்ற தடுமாற்ற
நூலினைக் கூறிய அசோக மரத்தினடியினுள்ள அருகனது, உரை கொண்டு
உழல் பேய் அமண் குண்டர் அவர் - உரையினைக் கொண்டு உழலுகின்ற
பேய் போன்ற சமணக் கீழ் மக்களாகிய அன்னார், பண்டு போல் விடுத்தனர்
-முன்போல் விடுத்தார்.
குண்டு
- வேள்விக்குண்டம். கொடிய வெம் : ஒரு பொருளன. பண்டு
போல் - முன்பு யானையையும் நாகத்தையும் விடுத்தமைபோல. கூடலம்பதி,
அம் : சாரியை. உண்டு இல்லை - அத்தி நாத்தி; அநேகாந்தமாக
விரித்துரைக்கும் எழுவகையும் இவ்விரண்டுள் அடங்குதலின் யாண்டும்
இவையே கூறப்படும். பிண்டி - அசோகு. குண்டராகிய அவர் பசுவைக்
கூடலம்பதிமேல் விடுத்தனர் என்க. (5)
[கலிவிருத்தம்]
|
மாடமலி
மாளிகையி லாடுகொடி மானக்
கோடுகளி னோடுமுகில் குத்திமிசை கொத்துச்
சேடன்முடி யுங்கதிர்கொள் சென்னிவரை யுந்தூள்
ஆடவடி யிட்டுலவை யஞ்சிட வுயிர்த்தே. |
(இ
- ள்.) மாடம் மலி மாளிகையில் ஆடு கொடி மான - மாடங்கள்
நிறைந்த மாளிகையின்கண் ஆடுகின்ற கொடியையொப்ப, கோடுகளின் -
கொம்புகளினால், ஒடு முகில் குத்திமிசை கோத்து - வானில் ஓடுகின்ற
மேகங்களைக் குத்தி மேலே கோத்து, சேடன் முடியும் - அனந்தனது முடியும், சதிர்கொள்
சென்னி வரையும் தூள் ஆட - ஒளியினைக் கொண்ட
முடியினையுடைய மேருமலையும் புழுதியாட, அடி இட்டு - அடிபெயர்த்து
வைத்து, உலவை அஞ்சிட உயிர்த்து - காற்றும் அஞ்சுமாறு மூச்செறிந்து.
மாடம்
- மேனிலை. (6)
விடுத்திடு முயிர்ப்பினெதிர் பூளைநறை வீபோல்
அடுத்திடு சராசர மனைத்துமிரி வெய்தக்
கடுத்திடு சினக்கனலி னுக்குலக மெல்லாம்
மடுத்திடு தழற்கடவுள் வார்புனலை மான. |
|