(இ
- ள்.) விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் - விடுகின்ற மூச்சினெதிரே,
அடுத்திடு சரஅசரம் அனைத்தும் - நேர்படுகின்ற இயங்கியற் பொருளும்
நிலையியற் பொருளுமாகிய எல்லாம், நறை பூளை வீபோல் இரிவு எய்த -
தேனையுடைய பூளைப்பூப் போலப் பறக்கவும், கடுத்திடு சினக்கனலினுக்கு -
மிக்கெழுகின்ற கோபத்தீயினுக்கு, உலகம் எல்லாம் மடித்திட தழல் கடவுள்
வார் புனலை மான - உலகமனைத்தையும் அழிக்கும் தீக் கடவுள் பெருகிய
நீரினையொப்பதாகவும்.
சினக்கனலின்
வெம்மையை நோக்குழி ஊழித்தீயும் நீர் போலத்
தண்ணிதாய்த் தோன்றவென்க. (7)
உடன்றிறைகொள் புள்ளொடு விலங்கலறி யோட
மிடைந்தபழு வத்தொடு விலங்கலை மருப்பால்
இடந்தெறி மருத்தென வெறிந்தளவி லோரைத்
தொடர்ந்துடல் சிதைத்துயிர் தொலைத்திடியி னார்த்தே. |
(இ
- ள்.) இறைகொள் புள்ளொடு - தங்கிய பறவைகளோடு, விலங்கு
அலறி ஓட - மிருகங்களும் அலறி ஓடுமாறு, மிடைந்த பழுவத்தொடு
விலங்கலை - நெருங்கிய வனங்களோடு மலைகளையும், உடன்று மருப்பால்
இடந்து - வெகுண்டு கொம்பினால் அடியொடு பெயர்த்து, எறி மருத்து என
எறிந்து - வீசுகின்ற காற்றைப் போல எறிந்து, அளவிலோரைத் தொடர்ந்து
உடல் சிதைத்து உயிர் தொலைத்து - அளவிறந்த மக்களைப் பின் தொடர்ந்து
அவர்கள் உடலைச் சேதித்து உயிரைத் தொலைத்து, இடியின் ஆர்த்து -
இடிபோல பேரொலி செய்து.
இறைகொள்
- வனங்களிலும் மலைகளிலும் தங்குதலைக் கொண்ட.
உடன்று இடந்து எறிந்து எனக் கூட்டுக. (8)
மறலிவரு மாறென மறப்பசு வழிக்கொண்
டறலிவர் தடம்பொருனை யாறுடைய மாறன்
திறலிமலர் மங்கையுறை தென்மதுரை முன்னா
விறலிவரு கின்றதது மீனவ னறிந்தான். |
(இ
- ள்.) மறலி வருமாறு என மறப்பசு வழிக் கொண்டு - கூற்றுவன்
வருந்தன்மை போலக் கொலைத் தொழிலையுடைய பசுவானது வழி நடந்து,
அறல் இவர் தடம் பொருளை ஆறு உடைய மாறன் - கருமணல் பரந்த
பெரிய பொருனை யாற்றினையுடைய பாண்டியனது, திறலி மலர் மங்கை
உறை தென்மதுரை முன்னா - வீரமகளும் திருமகளும் உறைகின்ற
தென்றிசைக்கணுள்ள மதுரையை நோக்கி, விறலி வருகின்றது - வெற்றி
கொண்டு வாராநின்றது; அது மீனவன் அறிந்தான் - அதனைப் பாண்டியன்
அறிந்தான்.
திறலி
- திறல் உடையவன்; கொற்றவை; இ : பெயர் விகுதி. விறலி -
விறல் கொண்டு. "மாடமலி" என்பது முதலிய செய்யுட்களிலுள்ள எச்சங்களை
'வருகின்றது' என்பதனோடு முடிக்க. (9)
(பா
- ம்.) * திறலி மரைமங்கை.
|