மீனவனு மாநகருண் மிக்கவரு முக்கண்
வானவனை மாமதுரை மன்னவனை முன்னோர்
தானவனை யாழிகொடு சாய்த்தவனை யேத்தா
ஆனதுரை செய்துமென வாலய மடைந்தார். |
(இ
- ள்.) மீனவனும் - அனந்தகுண பாண்டியனும், மாநகருள்
மிக்கவரும் - பெரிய அந்நகரத்துள் மேம்பட்டவரும், முக்கண் வானவனை
- மூன்று கண்களையுடைய தேவனை, மா மதுரை மன்னவனை - பெரிய
மதுரைக்கு மன்னனாகிய சுந்தரபாண்டியனை, முன் ஓர் தானவனை
ஆழிகொடு சாய்த்தவனை - முன்னாளிலே சலந்தரன் என்னும் ஓர்
அசுரனைத் திகிரிப்படையினால் வதைத்தவனை, ஏத்தா ஆனது உரை
செய்தும் என - துதித்து நிகழ்ந்த செய்தியைக் கூறுவேமென்று, ஆலயம்
அடைந்தார் - திருக்கோயிலை அடைந்தார்கள்.
மிக்கவர்
- மேலோர். ஒரு பொருள்மேற் பல பெயர் வந்தன.
ஆனது - நிகழ்ந்தது. உரை செய்தும் என - உரைப்பேம் என்று.(10)
நாதமுறை யோபொதுவின் மாறிநட மாடும்
பாதமுறை யோபல வுயிர்க்குமறி விக்கும்
போதமுறை யோபுனித பூரண புராண
வேதமுறை யோவென விளித்துமுறை யிட்டார். |
(இ
- ள்.) நாதமுறையோ - நாதனே முறையோ; பொதுவில் மாறி
நடம் ஆடும் பாத முறையோ - வெள்ளியம்பலத்திலே கால் மாறி
ஆடியருளும் திருவடியையுடையவனே முறையோ; பல உயிர்க்கும்
அறிவிக்கும் போத முறையோ - எல்லா உயிர்களுக்கும் அறிவிக்கின்ற
போதனே முறையோ; புனித - தூயவனே, பூரண - எங்கும் நிறைந்தவனே,
புராண - பழம்பொருளானவனே, வேதமுறையோ - வேதத்தை அருளியவனே
முறையோ;என விளித்து முறையிட்டார் - என்று கூவி முறையிட்டார்கள்.
நாதன்
- தலைவன்; நாதத்தின் வடிவானவன் என்றுமாம்.
உயிர்களெல்லாம் இறைவன் அறிவிக்க அறியு மியல்பின வாகலின்
'பலவுயிர்கும் அறிவிக்கும் போத' என்றார். நாத, பாத என்றிங்ஙனம்
விளித்து, முறையோ என முறையிட்டார் என்க. முறையிடுதல் - பிறரால்
நலிதலுறுவார் தம்மைக் காக்க வேண்டுமெனக் கூவி வேண்டுதல். (11)
நின்றுமுறை யிட்டவரை நித்தனரு ணோக்கால்
நன்றருள் சுரந்திடப நந்தியை விளித்துச்
சென்றமண ரேவவரு தீப்பசுவை நீபோய்
வென்றுவரு வாயென விளம்பினன் விடுத்தான். |
(இ
- ள்.) நின்று முறையிட்டவரை - (அங்ஙனம் திருமுன்) நின்று
முறையிட்டவர்களை, நித்தன் - இறைவன், அருள் நோக்கால் நன்று அருள்
|