சுரந்து - திருவருள்
நோக்கத்தாலே மிகவும் கருணை புரிந்து, இடப நந்தியை
விளித்து - இடப வடிவாயுள்ள திருநந்திதேவரை அழைத்து, நீ போய் - நீ
சென்று, அமணர் ஏவ சென்று வரு தீப் பசுவை வென்று வருவாய் என -
சமணர்கள் ஏவுதலால் வருகின்ற கொடிய பசுவை வென்று வருவாயாக என்று,
விளம்பினன் விடுத்தான் - கூறிவிடுத்தான்.
நன்று - பெரிது.
சென்று, வரு என்பன ஒரு பொருளே குறித்தன.
விளம்பினன் : முற்றெச்சம். (12)
[கலிநிலைத்துறை]
|
தண்டங்
கெழுகூற் றமுமஞ்சத் தறுகட் செங்கட்
குண்டந் தழன்று கொதிப்பக்கொடு நாக்கெ றிந்து
துண்டந் துழாவக் கடைவாய்நுரை சோர்ந்து சென்னி
அண்டந் துழாவ வெழுந்தன்றாட லேறு மாதோ. |
(இ
- ள்.) தண்டம் கெழு கூற்றமும் அஞ்ச - தண்டப் படையை
ஏந்திய கூற்றுவனும் அஞ்சும்படி, தறுகண் செங்கண் குண்டம் தழன்று
கொதிப்ப - கொடிய சிவந்த கண்களாகிய குழிகள் அழற்சிகை விட்டுக்
கொதிக்கவும், கொடு நாக்கு எறிந்து துண்டம் துழாவ - வளைந்த நாவானது
தாவி மூக்கினைத் துழாவவும், கடவாய் நுரை சோர்ந்து சென்னி அண்டம்
துழாவ - கடைவாய் நுரை ஒழுகப் பெற்றுத் தலையானது அண்டத்தைத்
தடவவும், அடல் ஏறு எழுந்தன்று - வலி மிக்க இடபம் எழுந்தது.
குண்டம்
- தீ வளர்க்கும் குழி. எறிந்து - தாவியென்னும் பொருட்டு,
துண்டம் - மூக்கு. எழுந்தன்று - எழுந்தது; அன் : சாரியை. மாது, ஓ :
அசைகள். (13)
நெற்றித் தனியோடை நிமிர்ந்து மறிந்த கோட்டிற்
பற்றிச் சுடர்செம் மணிப்பூண்பிறை பைய நாகஞ்
சுற்றிக் கிடந்தா லெனத் தோன்றவெள் ளாழியீன்ற
கற்றைக் கதிர்போற் பருமம்புறங் கௌவி மின்ன. |
(இ
- ள்.) நெற்றித் தனி ஓடை நிமிர்ந்து - நெற்றியிலுள்ள ஒப்பற்ற
பட்டமானது சிறக்கப் பெற்று, மறிந்த கோட்டில் பற்றிச் சுடர் செம்மணிப்
பூண் - வளைந்த கொம்பினைப் பொருந்தி ஒளிவிடும் சிவந்த
மாணிக்கத்தாலாகிய பூணானது, பிறை - மூன்றாம் பிறையை, பைய நாகம்
சுற்றிக் கிடந்தாலெனத் தோன்ற - படத்தையுடைய கேதுவென்னும்
பாம்பானது வளைந்து கிடந்தாற்போலத் தோன்றவும், வெள் ஆழி ஈன்ற
கற்றைக் கதிர் போல் பருமம் புறம் கௌவி மின்ன - வெள்ளிய கடல்
பெற்ற நெருங்கிய கிரணத்தையுடைய சூரியனைப் போலப் பொன்னாலாகிய
கவசம் உடம்பின் புறத்திலே பொருந்தி விளங்கவும்.
செம்மணிப்
பூணுக்கேற்பச் செம்பாம்பாகிய கேதுவைக் கொள்க.
வளைந்த கொம்பிற்குப் பிறையும், பூணுக்குக் கேதுவும், நெற்றிப்
பட்டத்திற்கு
|