II


176திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) அடியிட்டு நிலம் கிளைத்து - அடியினால் நிலத்தைக்
கிளைத்து, அண்டம் எண் திக்கும் போர்ப்பப் பொடி இட்டு -
அண்டத்தையும் எட்டுத் திசைகளையும் மூடுமாறு புழுதி செய்து, உயிர்த்து -
பெருமூச்செறிந்து, பொரு கோட்டினில் குத்திக் கோத்திட்டு - பொருதற்குரிய
கொம்பினாற் குத்தி (மண்ணைக்) கோத்துக் கொண்டு, இடி இட்டு அதிர் கார்
எதிர் ஏற்று எழுந்தாங்கு நோக்கி - இடித்து முழங்கும் முகிலினை
எதிர்த்தெழுந்தது போல (மேல்) நோக்கி, இரு கண் செடி இட்டு அழல் சிந்த
நடந்தது - இரண்டு கண்களும் ஒளி கான்று தீயினைச் சிந்த நடந்தது.

     அடியிட்டு, இட்டு : மூன்றனுருபின் பொருட்டு, பொடியிட்டு -
பொடியாக்கி. இடியிட்டு - இடித்து. செடி - ஒளி; கற்றையுமாட். அன்று, ஏ :
அசை. (17)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
பால்கொண்ட நிழல்வெண் டிங்கட் பகிர்கொண்ட மருப்பிற்
                                         கொண்மூச்
சூல்கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளியோர் வெள்ளிக் குன்றங்
கால்கொண்டு நடந்தா லென்னக் கடிந்துடன் றாவைச் சீற்றம்
மேல்கொண்டு நாற்றம் பற்றி வீங்குயிர்ப் பெறிந்து கிட்டா.

     (இ - ள்.) பால் கொண்ட நிழல் வெண் திங்கள் பகிர் கொண்ட
மருப்பில் - பால் போலும் வெள்ளிய ஒளியினையுடைய திங்களின்
பிளவையொத்த கொம்பினால், கொண்மூ சூல் கொண்ட வயிற்றைக் கீண்டு
துள்ளி - முகிலினது சூலைக் கொண்ட வயிற்றைக் கிழித்துத் துள்ளிக்
கொண்டு, ஓர் வெள்ளிக்குன்றம் கால் கொண்டு நடந்தால் என்னக் கடிந்து -
வெள்ளி மலை ஒன்று கால் பெற்று நடந்தாற்போல விரைந்து சென்று,
உடன்று - பகைத்து, சீற்றம் மேல் கொண்டு - வெகுளி மீக்கொண்டு, நாற்றம்
பற்றி வீங்கு உயிர்ப்பு எறிந்த ஆவைக் கிட்டா - நாற்றம் பிடித்துப்
பெருமூச்செறிந்து பசுவினை நெருங்கி.

     பால் கொண்ட வெண்ணிழல் என்க. பால் கொண்ட, பகிர் கொண்ட
என்பவற்றில் கொண்ட என்பது உவமவுருபு. கீண்டு, மரூஉ. நாற்றம் பற்றுதல்
நிலத்தை மோந்து நாற்றமறிதல். நாற்றம் பிடித்தலும் வீங்குயிர்ப் பெறிதலும்
ஏற்றின் சாதித்தன்மை. வெள்ளிக் குன்றம் கால் கொண்டு நடந்தாலென்ன
என்பது இல் பொருளுவமை. (18)

குடக்கது குணக்க தென்னக் குணக்கது குடக்க தென்ன
வடக்கது தெற்க தென்னத் தெற்கது வடக்க தென்ன
முடுக்குறு மருப்பிற் கோத்து முதுகுகீ ழாகத் தள்ளும்
எடுக்குறு மலையைக் கால்பேர்த் தெனத்திசைப் புறத்து வீசும்.

     (இ - ள்.) குடக்கது குணக்கது என்ன - மேலைத் திசையில் உள்ள
பசு அப்பொழுதே கீழைத் திசையில் உள்ளது என்று சொல்லவும், குணக்கது
குடக்கது என்ன - கிழக்கேயுள்ளது மேற்கேயுள்ளதென்னவும், வடக்கது
தெற்கது என்ன - வடக்கிலுள்ளது தெற்கேயுள்ளதென்னவும், தெற்கது