அந்நிலை நகரு ளாரு மரசனு மகிழ்ச்சி தூங்கிச்
சன்னிதி யிருந்த நந்தி தாளடைந் திறைஞ்சிப் போக
மின்னவிர் சடையா னந்தி வென்றிசால் வீறு நோக்கி
இன்னமு தனையா ளோடுங் கறிசிறந் திருக்கு நாளில்.
|
(இ
- ள்.) அந்நிலை நகருளாரும் அரசனும் மகிழ்ச்சி தூங்கி -
அப்பொழுது நகரிலுள்ளாரும் மன்னனும் களிப்பு மிக்கு, சன்னிதி இருந்த
நந்தி தாள் அடைந்து இறைஞ்சிப் போக - திரு முன்பே இருந்த திரு நந்தி
தேவரின் திருவடியை அடைந்து வணங்கிச் செல்ல, மின் அவிர் சடையான் -
மின் போல் விளங்குஞ் சடையையுடைய சோமசுந்தரக் கடவுள், நந்தி வென்றி
சால் வீறு நோக்கி - அந் நந்தி தேவரின் வெற்றிமிக்க பெருமிதத்தினைக்
கண்டு, இன் அமுது அனையாளோடும் களி சிறந்து இருக்கும் நாளில் -
இனிய அமுதத்தையொத்த உமைப் பிராட்டியோடும் களிப்பு மிக்கு
இருக்கும்பொழுது.
வீறு
- பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. (24)
அவ்விடை வரைமேன் முந்நீ ரார்கலி யிலங்கைக் கேகுந்
தெவ்வடு சிலையி ராமன் வானர சேனை சூழ
மைவரை யனைய தம்பி மாருதி சுக்கி ரீவன்
இவ்வடல் வீர ரோடு மெய்தியங் கிறுத்தான் மன்னோ. |
(இ
- ள்.) அவ்விடை வரைமேல் - அந்த இடப மலையின் மேல்,
முந்நீர் ஆர்கலி இலங்கைக்கு ஏகும் - மூன்று நீர்களையுடைய கடல் சூழ்ந்த
இலங்கைக்குச் செல்லா நின்ற, தெவ் அடுசிலை இராமன் - பகைவரைக்
கொல்லும் கோதண்டத்தையேந்திய இராமபிரான், வானர சேனை சூழ -
குரக்குப் படைகள் சூழ, மைவரை அனைய தம்பி மாருதி சுக்கிரீவன் - நீல
மலையை ஒத்த இலக்குவனும் அனுமானும் சுக்கிரீவனுமாகிய, இவ்வடல்
வீரரோடும் எய்தி - இந்த வெற்றியையுடைய வீரர்களோடும் அடைந்து,
அங்கு இறுத்தான் - அங்கே தங்கினான்.
மைவரை
- மேகந் தவழும் மலையுமாம். மாருதி - காற்றின் மைந்தன்.
மாருதம் - காற்று. அவ்விடைவரைமேல் எய்தி அங்கு இறுத்தான் என்க. மன்,
ஓ : அசைகள். (25)
அன்னது தெரிந்து விந்த மடக்கிய முனியங் கெய்தி
மன்னவற் காக்கங் கூறி மழவிடைக் கொடியோன் கூடற்
பன்னரும் புகழ்மை யோது பனுவலை யருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோ னாகி. |
(இ
- ள்.) விந்தம் அடக்கிய முனி - விந்த மலையை அடக்கிய
அகத்திய முனிவன், அன்னது தெரிந்து அங்கு எய்தி - அதனை உணர்ந்து
அங்குச் சென்று, மன்னவற்கு ஆக்கம் கூறி - மன்னனாகிய இராமனுக்கு
ஆக்க மொழி கூற, மழவிடைக் கொடியோன் கூடல் - இளமை பொருந்திய
|