II


180திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இடபமாகிய கொடியையுடைய சோமசுந்தரக் கடவுளது மதுரைப் பதியின்,
பன் அரும் புகழ்மை ஓது பனுவலை - சொல்லுதற்கரிய புகழைக் கூறும்
நூலை, அருளிச் செய்ய - கூறியருள, முன்னவன் பெருமை கேட்டு -
அம் முதல்வனது பெருமையைக் கேட்டு, முகிழ்த்தகை முடியோன் ஆகி
- கூப்பிய கையையுடைய முடியையுடையவனாய்.

     விந்தம் அடக்கிய - மேருவோடு இகலிவோங்கிய விந்தத்தின்
வீற்றினையடக்கிய. புகழ்மை, மை பகுதிப் பொருள் விகுதி. முடியின்
மேற் குவித்த கைகளையுடையனாகி என்க. முனி அருளிச் செய்ய
இராமன் கேட்டு என இயையும். (26)

முனியொடு குறுகிச் செம்பொன் முளரியுண் மூழ்கி யாதித்
தனிமுத லடியை வேணி முடியுறத் தாழ்ந்து வேத
மனுமுறை சிவாக மத்தின் வழிவழா தருச்சித் தேத்திக்
கனிவுறு மன்பி லாழ்ந்து முடிமிசைக் கரங்கள் கூப்பி.

     (இ - ள்.) முனியொடு குறுகி - அம் முனிவனோடு சென்று,
செம்பொன் முளரியுள் மூழ்கி - சிவந்த பொற்றாமரையில் நீராடி, ஆதித்
தனி முதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து - யாவர்க்கும் ஆதியாகிய
ஒப்பற்ற முதற் கடவுளின் திருவடியைச் சடையுடைய தனது முடி
பொருந்துமாறு வணங்கி, வேத மனுமுறை சிவகாமத்தின் வழி வழாது
அருச்சித்துத் துதித்து, கனிவுறும் அன்பில் ஆழ்ந்து - கனிந்த பேரன்பில்
அழுந்தி, முடிமிசைக் கரங்கள் கூப்பி - முடியின் மேற் கைகளைக் குவித்து
நின்று.

     தனிமுதல் - முழுமுதல். இராமன் தவக்கோலந் தாங்கி வனம்
போந்தானாகலின் 'வேணிமுடியுற' என்றார். மனு - மந்திரம். (27)

புங்கவ சீவன் முத்தி புராதிப புனித போக
மங்கல மெவற்றி னுக்குங் காரண வடிவ மான
சங்கர நினது தெய்வத் தானங்க ளனந்த மிந்த
அங்கண்மா ஞால வட்டத் துள்ளன வவைக டம்மில்.

     (இ - ள்.) புங்கவ - தேவர் யாவர்க்கும் உயர்ந்தோனே, சீவன்
முத்தி புர அதிப - சீவன் முத்தி புரத்திற்குத் தலைவனே, புனித போக
மங்கலம் எவற்றினுக்கும் காரண வடிவம் ஆன சங்கர - தூயபோக
நலங்கள் எவற்றுக்குங் காரண வடிவாகிய சங்கரனே, இந்த அம் கண்மா
ஞால வட்டத்து - இந்த அழகிய இடத்தையுடைய பெருமை பொருந்திய
நிலவுலகின்கண், நினது தெய்வத் தானங்கள் அனந்தம் உள்ளன -
நின்னுடைய தெய்வத் தன்மை பொருந்திய பதிகள் பல உள்ளன; அவைகள்
தம்மில் - அவற்றுள். புங்கவன் - உயர்ந்தோன், வானோன். சீவன்
முத்திபுரம் - மதுரை : தலவிசேடத்திற் காண்க. புராதிப : நெடிற் சந்தி.
புனித என விளியாக்கித்