II


மாயப்பசுவை வதைத்த படலம்181



தூயனே என்றுரைத்தலும், தூய போகங்கட்கும் மங்கலங்கட்கும் காரண
வுருவான என்றுரைத்தலும் பொருந்தும். சங்கரன் - சுகத்தையருளுபவன்.
அனந்தம் - வரம்பில்லன. ஞால வட்டம் - பூ மண்டலம். (28)

[கலிநிலைத்துறை]
அற்பு தப்பெரும் பதியிந்த மதுரையீ தாற்றப்
பொற்பு டைத்தென்ப தெவன்பல புவனமு நின்பாற்
கற்பு வைத்துய நீசெய்த கருமத்தின் விருத்தம்
வெற்பு ருக்களாய்ப் புடைநின்று விளங்கலான் மன்னோ.

     (இ - ள்.) அற்புதப் பெரும்பதி இந்த மதுரை - அற்புதம் பொருந்திய
சிறந்த பதியாகும் இந்த மதுரையானது; ஈது ஆற்றப் பொற்பு உடைத்து
என்பது எவன் - இது மிக்க மேன்மையுடைத்தென்று கூறுவது என்னை, பல
புவனமும் நின்பால் கற்பு வைத்து உய - எல்லாவுலகமும் நின்னிடத்தே
தியானம் வைத்துப் பிழைக்குமாறு, நீ செய்த கருமத்தின் விருத்தம் - நீ
செய்தருளிய திருவிளையாடல்களின் வரலாறு, வெற்பு உருக்காய்ப் புடை
நின்று விளங்கலால் - மலை வடிவங்களாய்ப் பக்கத்தே நின்று விளங்குதலால்.

     கூறுதல் மிகையென்பார் 'எவன்' என்றார். கற்பு - கற்றல்; ஈண்டுத்
தியானம். கருமம் - காரியம். விருத்தம் - செய்தி. கொலைத் தொழில்
என்பது கொண்டு கருமத்தின் ஒவ்வாமை என்றுரைத்தலுமாம். இங்கு நீ புரிந்த
கருமத்தின் விருத்தம் வெற்புருக்களாய் இப்பதியின் மேன்மைக்கு அழியாத
சான்றுகளாக விளங்குதலின் இது பொற்புடைத்தென்பது எவன் என
விரித்துரைத்துக் கொள்க. மன், ஓ : அசைகள். (29)

கண்ட வெல்லையிற் றுன்பங்கள் களைதற்கு மளவைக்
கண்ட ரும்பெருஞ் செல்வங்க ளளித்தற்குங் கருணை
கொண்டு நீயுறை சிறப்பினாற் குளிர்மதிக் கண்ணி
அண்ட வாணவிவ் விலிங்கத்துக் கொப்புவே றாமோ.

     (இ - ள்.) கண்ட எல்லையில் துன்பங்கள் களைதற்கும் - பார்த்த
வளவிலே துன்பங்களைப் போக்குதற்கும், அளவைக்கு அண்டு அரும்
பெருஞ் செல்வங்கள் அளித்தற்கும் - அளவைக்குப் பொருந்துதல் இல்லாத
பெரிய செல்வங்களை அருளுதற்கும், கருணை கொண்டு நீ உறை
சிறப்பினால் - திருவருள் கொண்டு நீ வீற்றிருக்குஞ் சிறப்பினாலே,
குளிர்மதிக் கன்னி அண்ட வாண - குளிர்ந்த பிறையை மாலையாகவுடைய
தேவனே, இவ்விலிங்கத்துக்கு வேறு ஒப்பு ஆமோ - இந்தச்
சொக்கலிங்கத்துக்கு வேறொன்று ஒப்பாகுமோ?

     அண்டு - கிட்டுதல்; முதனிலைத தொழிற் பெயர். அளவைக்கு அண்டு
அரும் - அளக்க வொண்ணாத என்றபடி, கண்ணி முடியிற் சூடு மாலை.
அண்ட வாணன் - தேவன். வாழ்நன் என்பது வாணன் என மருவிற்று.
ஓகாரம் எதிர்மறை. (30)