II


182திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தோய்ந்தி டும்பொழு தீட்டிய தொல்வினைப் படலம்
மாய்ந்தி டும்படி மாய்த்துநின் மங்கல போகம்
ஈந்தி டும்படிக் கிருந்தமா தீர்த்தத்தி னியல்பை
ஆய்ந்தி டும்பொழு ததற்கொரு தீர்த்தமொப் பாமோ.

     (இ - ள்.) தோய்ந்திடும் பொழுது - (தன்னில்) மூழ்கும் பொழுதில்,
ஈட்டிய தொல்வினைப் படலம் மாய்ந்திடும்படி மாய்த்து - தேடி வைத்த
பழவினைத் தொகுதி நசிக்குமாறு சிதைத்து, நின் மங்கல போகம்
ஈந்திடும்படிக்கு இருந்த - நினது நன்மையாகிய போகத்தை அருளும்படி
அமைந்த, மாதீர்த்தத்தின் பொய்கையின் தன்மையை ஆராயுங்கால், அதற்கு
ஒரு தீர்த்தம் ஒப்பு ஆமோ - அதற்கு மற்றொரு தீர்த்தம் ஒப்பாகுமோ?

     ஈட்டிய - பல பிறவிகளிலும் தேடிய. தொல்வினைப் படலம் - சஞ்சித
கன்மத் தொகுதி. நின் மங்கலபோகம் என்றது சிவபோகத்தை. படிக்கு, கு :
பகுதிப் பொருள் விகுதி. (31)

எத்த லத்தினு மொவ்வொன்று விழுமிதா மிந்த
மெய்த்த லத்திலிம் மூவகை விழுப்பமும் விளங்கும்
அத்த வாதலா லித்தல மடைந்தவ ரெவர்க்குஞ்
சித்த சுத்தியும் பல்வகைச் சித்தியும் பயக்கும்.

     (இ - ள்.) எத்தலத்தினும் ஒவ்வொன்று விழுமிதாம் - எந்தத்
தலங்களிலும் மூர்த்தியும் தீர்த்தமும் தலமுமாகிய மூன்றனுள் ஒவ்வொன்று
சிறப்புடைத்தாகும்; இந்த மெய்த்தலத்தில் இம் மூவகைச் சிறப்பும் விளங்கும்;
ஆதலால் - ஆதலினால், அத்த - இறைவனே, இத்தலம் - இப்பதியானது,
அடைந்தவர் எவர்க்கும் - தன்னைச் சார்ந்தவரனைவருக்கும், சித்தசுத்தியும்
பல்வகைச் சித்தியும் பயக்கும் - மனத் தூய்மையையும் அணிமா முதலிய
பலவகைச் சித்திகளையும் அருளா நிற்கும்.

     மேல் மூன்று செய்யுட்களால் தலம், மூர்த்தி, தீர்த்தம் என்பவற்றின்
சிறப்பு முறையே கூறப் பெற்றமையின் அவற்றைச் சுட்டி 'இம் மூவகை
விழுப்பமும்' எனப்பட்டது. (32)

அடியனே னெண்ணுங் கருமமுஞ் சரதமே யாக
முடியு மாறரி தச்செயன் முடியுமெப் படியப்
படிபு ரிந்தருள் கடிதெனப் பணிந்தனன் பரனும்
நெடிய வான்படு மமுதென வெதிர்மொழி நிகழ்த்தும்.

     (இ - ள்.) அடியனேன் எண்ணும் கருமமும் சரதமே ஆக முடியுமாறு
அரிது அடியேன் எண்ணிய செயலும் உண்மையாக முடியுந்தன்மை அரிதோ;
அச் செயல் எப்படி முடியும் அப்படி - அச் செயலானது