II


மெய்க்காட்டிட்ட படலம்191



     (இ - ள்.) எவரேனும் - யாவராயினும், உருத்திர சாதனம் கண்டால்
எதிர் வணங்கி - சிவசாதனந் தாங்கினவரைக் காணின் எதிர் சென்று வணங்கி,
அவரே நம் பிறப்பு அறுக்க வடிவு எடுத்த அரன் என்று - அவரே நமது
பிறப்பைப் போக்கத் திருவுருவமெடுத்த சிவ பெருமானென்று, கவராத அன்பு
உள்ளம் கசிந்து ஒழுக அருச்சித்து - பிளவுபடாத அன்பால் உள்ளம்
நெக்குருக வழிபட்டு, சுவை ஆறின் அமுது அருத்தி - அறுசுவையோடு கூடிய திருவமுதை உண்பித்து, எஞ்சிய இன்சுவை தெரிவான் - (அவர் உண்டு)
மிஞ்சியவற்றை இனிய சுவை பார்ப்பான்.

     எவரேனும் - உருப்பொலாதவர் இழிகுலத்தவர் முதலானோராயினும்.
உருத்திர சாதனம் - திருநீறு உருத்திராக்கம். கவராத - ஐயுறாத. எஞ்சிய -
மிச்சிலாயுள்ளன : வினையாலணையும் பெயர். சுவை தெரிதல் உண்டலாகிய
காரியத்தை உணர்த்திற்று.

"எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
     திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
     யுகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி
     யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
     கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே"

என்னும் திருத்தாண்டகம் இங்கே சிந்திக்கற்பாலது. (11)

இன்றைக்கா யிரநாளைக் கிருமடங்கு வருநாட்கும்
அன்றைக்கன் றிருமடங்கா வரசனது* பொருளெல்லாங்
கொன்றைச்செஞ் சடையார்க்கு மடியார்க்குங் கொடுப்பதனைத்
தென்றற்கோன் செவிமடுத்தான் சேனைக்கோ னிதுசெய்வான்.

     (இ - ள்.) இன்றைக்கு ஆயிரம் நாளைக்கு இருமடங்கு - இன்றைக்கு
ஆயிரம் பொன்னும் நாளைக்கு இரட்டிப்பும், வரு நாட்கும் - மேலே
வருகின்ற நாட்களுக்கும், அன்றைக்கு அன்று இரு மடங்கா - அன்றைக்
கன்று இரட்டிப்பும் ஆக, அரசனது பொருள் எல்லாம் - மன்னனுடைய
பொருள் முழுதையும், கொன்றைச் செஞ்சடையார்க்கும் அடியார்க்கும்
கொடுப்பதனை - கொன்றை மாலையையணிந்த சிவந்த சடையையுடைய
சிவபெருமானுக்கும் அவனடியார்க்குங் கொடுக்குஞ் செய்தியை, தென்றல்
கோன் செவிமடுத்தான் - தென்றல் தோன்றும் பொதியின் மலைக்குத்
தலைவனாகிய குலபூடணன் கேள்வியுற்றான்; சேனைக்கோன் இது செய்வான்
- சேனையின் தலைவனாகிய சுந்தர சாமந்தன் இதனைச் செய்வானாயினன்.

     இன்றைக்கு நாளைக்கு என்பவற்றில் நான்கனுருபு ஏழாவதன் பொருளில்
வந்தது. நாளை - அடுத்து வருநாள்; "நாளைச் செய்குவம்


     (பா - ம்.) * அரசனருள் பொருள்.