அறமெனில்"
எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. அன்றைக்கு
அன்று
- அற்றையினும் மற்றைநாள். ஆக வென்பது ஈறு தொக்கது. கொடுப்பது :
தொழிற்பெயர். தென்றல் அதற்கிடமாகிய வெற்பினையுணர்த்திற்று. (12)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
காவல
னவையத் தெய்திக் காரியஞ் செய்வா ரோடு
மேவினன் பிறநாட் டுள்ள வீரர்க்கு வெறுக்கை போக்கிச்
சேவகம் பதிய வோலை செலவிடுத் தழைப்பான் போலப்
பாவகஞ் செய்து தீட்டிப் பட்டிமை யோலை யுய்ப்பான். |
(இ
- ள்.) காவலன் அவையத்து எய்திக் காரியம் செய்வாரோடு
மேவினன் - அரசன் அவைக்குச் சென்று வினையாளரோடு கலந்து, பிற
நாட்டு உள்ள வீரர்க்கு வெறுக்கை போக்கி - வேறு நாட்டிலுள்ள
வீரர்களுக்குப் பொருளை அனுப்பி, சேவகம் பதிய - போர்ச் செவகத்திற்
பதிவு செய்ய, ஓலை செல விடுத்து அழைப்பான் போல - திருமுகம் போக்கி
அழைப்பவன் போல, பாவகம் செய்து - பாவனை காட்டி, பட்டிமை ஓலை
தீட்டி உய்ப்பான் - பொய்யோலை எழுதி விடுப்பவனாய்.
காரியஞ்
செய்வார் - வினை செய்வார். போக்கி விடுத்து அழைப்பான்
போல வென்க. சேவகம், பதிதல் என்பன பொதுச் சொற்களாயினும் படையின்
ஊழியத்தையும் அதிற் பதிவு செய்தலையும் சிறப்பாகக் குறிப்பனவாகும்.
பட்டிமை - படிறு. மேவினன், உய்ப்பான் என்பன முற்றெச்சம். (13)
எழுதுக தெலுங்கர்க்
கோலை யெழுதுக கலிங்கர்க் கோலை
எழுதுக விராடர்க் கோலை யெழுதுக மராடர்க் கோலை
எழுதுக கொங்கர்க் கோலை யெழுதுக வங்கர்க் கோலை
எழுதுக துருக்கர்க் கோலை யென்றுபொய் யோலை விட்டான். |
(இ
- ள்.) தெலுங்கர்க்கு ஓலை எழுதுக - தெலுங்க நாட்டினர்க்கு
ஓலை எழுதுக; கலிங்கர்க்கு ஓலை எழுதுக - கலிங்க நாட்டினர்க்கு ஓலை
எழுதுக; விராடர்க்கு ஓலை எழுதுக - விராட நாட்டினர்க்கு ஓலை எழுதுக;
மராடர்க்கு ஓலை எழுதுக - மராட நாட்டினர்க்கு ஓலை எழுதுக;
கொங்கர்க்கு ஓலை எழுதுக - கொங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக;
வங்கர்க்கு ஓலை எழுதுக - வங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; துருக்கர்க்கு
ஓலை எழுதுக - துருக்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; என்று பொய் ஓலை
விட்டான் - என்று கூறிப் பொய்யோலை போக்கினான்.
என்று
- எனத் திருமுகம் வரைவானுக்குக் கூறி, அரசன் அறியும்படி
இங்ஙனம் கூறியதன்றி, ஓலை யெழுவித்ததுமிலன், அவ்வந் நாடுகட்கு
அனுப்பியது மிலன் என்பார் 'என்று பொய்யோலை விட்டான்' என்றார். (14)
|