கொண்ட, கொடி அணி
மாடக் கூடல் கோமகன் - கொடிகள் கட்டிய
மாடங்களையுடைய கூடலம்பதிக்கு நாயகனும், காமன் காய்ந்த பொடி அணி
புராணப் புத்தேள் புண்ணியன் - மன்மதனை எரித்த திருநீறு தரித்த முது
தெய்வமாகிய அறவுருவனும் ஆகிய சோமசுந்தரக் கடவுளின், அருளினால் -
திருவருளாலே, இடி அதிர் விசும்பு கீறி ஓர் தெய்வ வாக்கு எழுந்தது - இடி
முழங்கும் வானைக் கிழித்து ஒரு தெய்வ வாக்கு எழுந்தது.
விரதமாகப்
பூண்ட என விரிக்க. அடியார்களின் அல்லல் தீர்த்து
ஆளுவதையன்றி இறைவனுக்கு வேறு கடப்பாடில்லை என்றவாறாயிற்று.
காய்ந்த புண்ணியன், பொடியணிந்த புண்ணியன் எனத் தனித் தனி
சென்றியையும். (17)
சூழ்ந்தெழு சேனை யோடுந் தோற்றுது நாளை நீயும்
வீழ்ந்தர சவையத் தெய்தி மேவுதி யென்ன விண்ணம்
போழ்ந்தெழு மாற்றங் கேட்டிப் பொருநரே றுவகை வெள்ளத்
தாழ்ந்தனன் முந்நீர் வெள்ளத் தலர்கதி ரவனு மாழ்ந்தான். |
(இ
- ள்.) சூழ்ந்து எழு சேனையோடும் தோற்றுதும் நாளை - சூழ்ந்து
எழுகின்ற தானை வீரர்களோடு சுரமும் நாளை வருவோம்; நீயும் வீழ்ந்த
அரசு அவையத்து எய்தி மேவுதி என்ன - நீயும் (வீரர் வரவை) விரும்பிய
அரசனது அவையின்கட் சென்று இருப்பாயாக என்று, விண்ணம் போழ்ந்து
எழு மாற்றம் கேட்டு - வானைப் பிளந்தெழுந்த வார்த்தையைக் கேட்டு,
பொருநர் ஏறு உவகை வெள்ளத்து ஆழ்ந்தனன் - வீரருள் ஆண்சிங்கம்
போன்ற சுந்தரசாமந்தன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான்; அலர்
கதிரவனும் முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தான் - விரிந்த கிரணத்தையுடைய
சூரியனும் கடல் வெள்ளத்தில் மூழ்கினான்.
வீழ்ந்த
என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கது; விரும்பியெய்தி
என்றுமாம். விண்ணம், அம் : சாரியை. பொருநர் - வீரர். முந்நீராகிய
வெள்ளம் என்க. (18)
மீனவன் காண மேரு வில்லிதன் றமரை வன்கண்
மானவேன் மறவ ராக்கி வாம்பரி வீர னாகத்
தானுமோர் கூத்துக் கோலஞ் சமைத்துவந் தாட விட்ட
நீனிற வெழினி போலக் காரிரு ணிவந்த தெங்கும். |
(இ
- ள்.) மீனவன் காண - பாண்டியன் காணுமாறு, மேருவில்லி -
மேருவை வில்லாகக் கொண்ட சோம சுந்தரக் கடவுள், தன் தமரை -
தன்னுடைய கணங்களை, வன்கண் மான வேல் மறவர் ஆக்கி -
அஞ்சாமையையுடைய மான மிக்க வேலையேந்திய வீரர்களாகச் செய்து,
தானும் ஓர் வாம் பரி வீரன் ஆகக் கோலம் சமைந்து வந்து - தானும் ஒரு
தாவுகின்ற குதிரை வீரனாகக் கோலம் பூண்டு வந்து, கூத்து ஆட இட்ட -
திருக்கூத்து ஆடுதற்கு இடப்பட்ட, நீல் நிற எழினி போலக் கார் இருள்
எங்கும் நிவந்தது
- நீல நிறத்தையுடைய திரை போலக் கரிய இருளானது
எங்கும் மிக்கது.
|