தமர் - சிவகணங்கள்.
ஆட - நடிக்க, திருவிளையாடல் செய்ய. நீலம்
என்பது கடைக்குறையாயிற்று. இது தற்குறிப்பேற்றவணி.
(19)
புண்ணிய மனையிற்
போகிப் புலர்வதெப் போழ்தென் றெண்ணி
அண்ணல்சா மந்தன் றுஞ்சா னடிக்கடி யெழுந்து வானத்
தெண்ணிறை மீன நோக்கி நாழிகை யெண்ணி யெண்ணிக்
கண்ணுத லெழுச்சி காண்பா னளந்தனன் கங்கு லெல்லாம். |
(இ
- ள்.) அண்ணல் சாமந்தன் - பெருமையுடையனாகிய சுந்தர
சாமந்தன், புண்ணிய மனையில் போகி - அறம் நிலைபெற்ற தன் இல்லிற்
சென்று, புலர்வது எப்போழ்து என்று எண்ணி - விடிவது எப்போது என்று
கருதி, துஞ்சான் - தூங்காமல், அடிக்கடி எழுந்து - அடிக்கடி எழுந்தெழுந்து,
வானத்து எண் நிறை மீனம் நோக்கி - வானின்கண் உள்ள எண் மிக்க
மீன்களை நோக்கி, நாழிகை எண்ணி எண்ணி - நாழிகையை எண்ணி
யெண்ணி, கண்ணுதல் எழுச்சி காண்பான் - சோமசுந்தரக் கடவுளின்
வருகையைக் காணுதற்கு, கங்குல் எல்லாம் அளந்தனன் - இரவு முழுதையும்
அளந்தனன்.
அண்ணல்
சாந்தன், உயர்திணைப் பெயராகலின் வலி வர இயல்பாயிற்று. மீனம் - நாண் மீன்கள்.
இருபத்தேழு நாண்மீன்களில் உச்சியில் வருவதனைக்
கொண்டு இரவு நாழிகை கணிக்கப்படும். எழுச்சி - எழுந்தருளுகை. இரவில்
சென்ற நாழிகை இத்துணை, நின்ற நாழிகை இத்துணை என்று பன்முறையும்
எண்ணினமையின் 'கங்குலெல்லாம் அணந்தணன்' என்றார். துஞ்சான் :
முற்றெச்சம். காண்பான் : வினையெச்சம். (20)
தெருட்டரு
மறைக டேறாச் சிவபரஞ் சுடரோ ரன்பன்*
பொருட்டொரு வடிவங் கொண்டு புரவிமேற் கொண்டு போதும்
அருட்படை யெழுச்சி காண்பான் போலவார் கலியின் மூழ்கி
இருட்டுகள் கழுவித் தூய விரவிவந் துதயஞ் செய்தான். |
(இ
- ள்.) தெருள் தரு மறைகள் தேறாச் சிவபரஞ்சுடர் - அறிவை
விளக்குகின்ற மறைகளுந் தெளியாத சிவபரஞ்சோதி, ஓர் அன்பன் பொருட்டு
ஒரு வடிவம் கொண்டு - ஓர் அன்பன் காரணமாக ஒரு திருவுருவங்
கொண்டு, புரவிமேற் கொண்டு போதும் - குதிரை மேற்கொண்டு வருகின்ற,
அருள் படை எழுச்சி காண்பான் போல - அருட்படையெழுச்சியைக் காண
வந்தவன் போல, ஆர் கலியில் மூழ்கி - கடலில் முழுகி, இருள் துகள் கழுவி
- இருளாகிய அழுக்கினைப் போக்கி, தூய இரவி வந்து உதயம் செய்தான் -
தூயனாகிய பரிதி வந்து தோன்றினான்.
தெருள்
- தெளிந்த அறிவு. தெருட்டு எனப் பிரித்து, உயிர்கட்கு விதி
விலக்குகளைத் தெளிவிக்கின்ற என்றுரைத்தலுமாம். அருளினாலாகிய
படையெழுச்சி என்க. படையெழுச்சி - படையுடன் புறப்படுதல். பெரியாரைக்
காண வருவார் நீராடித் தூயவுடம்புடன் வருவராகலின் இரவியும் அங்ஙனம்
வந்தான் என்றார். இதுவும் தற்குறிப்
பேற்றவணி. (21)
(பா
- ம்.) * சுடரோ னன்பன்.
|