நெட்டிலை வடிவாள் குந்தந் தோமர நேமி நெய்த்தோர்
ஒட்டிய கணிச்சி சாப முடம்பிடி முதலா வெண்ணப்
பட்டவெம் படைமூ வாறும் பரித்தசெங் கையர் காலிற்
கட்டிய கழலர் காலிற் கடியராய்ப் புறம்பு காப்ப. |
(இ
- ள்.) நெடு இலை வடி வாள் - நெடிய தகட்டு வடிவமமைந்த
வடித்த வாளும், குந்தம் - பெருஞ்சவளமும், தோமரம் - இருப்புலக்கையும்,
நேமி - திகிரியும், நெய்த் தோர் ஒட்டிய கணிச்சி - குருதி பொருந்திய
மழுவும், சாபம் - வில்லும், உடம்பிடி - வேலும், முதலா எண்ணப்பட்ட -
முதுலாக எண்ணப்பட்ட, வெம்படை மூவாறும் பரித்த செங்கையர் - வெவவிய பதினெட்டுப்
படைக்கலங்களையும் ஏந்திய சிவந்த கையை யுடையவரும்,
காலில் கட்டிய கழலர் - காலிற்கட்டிய வீரக்கழலையுடையவரும், காலில்
கடியராய்ப் புறம்பு காப்ப - காற்றினும் விரைந்த செலவினையுடையவருமாய்ப்
புறத்திற் சூழ்ந்து காக்கவும்.
நெய்த்தோர்
- குருதி. படைக்கலங்களிற் சிறந்தனவாகக்
கொள்ளப்பட்டன பதினெட்டுப் போலும். பிரதம கணமும் பூதமறவரும்
இங்ஙனம் புறம்பு காப்பவென்க. (24)
வார்கெழு கழற்கா னந்தி மாகாளன் பிருங்கி வென்றித்
தார்கெழு நிகும்பன் கும்போ தரன்முதற் றலைவர் யாரும்
போர்கெழு கவசங் தொட்டுப் புண்டர நுதலிற் றீட்டிக்
கூர்கெழு வடிவா ளேந்திக் குதிரைச்சே வகராய்ச் சூழ. |
(இ
- ள்.) வார் கெழு கழல்கால் நந்தி - நீட்சி பொருந்திய வீரக்
கழல் அணிந்த காலையுடைய நந்தியும், மாகாளன் - மாகாளனும், பிருங்கி -
பிருங்கியும், வென்றித் தார்கெழு நிகும்பன் - வெற்றி மாலை பொருந்திய
நிகும்பனும், கும்போதரன் - கும்போதரனும். முதல் தலைவர் யாரும் -
முதுலிய சிவகணத் தலைவர் அனைவரும். போர் கெழு கவசம் தொட்டு -
போரிற்குரிய கவசம் பூண்டு, நுதலின் புண்டரம் தீட்டி - நெற்றியிலே திருநீறு
தரித்து, கூர்கெழு வடிவாள் ஏந்தி - கூர்மை பொருந்திய வடித்த வாளை
ஏந்தி, குதிரைச் சேவகராய்ச் சூழ - குதிரை வீரராய்ச் சூழ்ந்து வரவும்.
தொட்டு
- பூண்டு. (25)
கற்றைச்சா
மரைகள் பிச்சங் கவிகைபூங் கொடிக்கா டெங்கும்
துற்றக்*கா ரொலியு நாணத் தூரிய முழுது மேங்கக்
கொற்றப்போர் விடையைத் தானே குரங்குளைப் பரியா மேற்கொண்
டொற்றைச்சே வகராய் மாறி யாடிய வொருவர் வந்தார். |
(இ
- ள்.) கற்றைச் சாமரைகள் பிச்சம் கவிகை பூங்கொடிக் காடு
எங்கும் துற்ற - திரளாகிய சாமரைகளும் பீலிகளும் குடைகளும்
பொலிவினையுடைய துவசக்காடும் எங்கும் நெருங்கவும், கார் ஒலியும் நாணத்
தூரியம் முழுதும் ஏங்க - முகிலின் இடியொலியும் நாணுமாறு
(பா
- ம்.) * எங்கு முற்ற.
|