II


198திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இயங்களைனைத்தும் முழங்கவும், கொற்றப் போர்விடையைத் தானே -
வெற்றியையுடைய போருக்குரிய இடபவூர்தியையே, குரங்கு உளைபரியா
மேற்கொண்டு - வளைந்த பிடரி மயிரையுடைய குதிரையாக (ஆக்கி),
அதில் ஏறியருளி, ஒற்றைச் சேவகராய் - ஒப்பற்ற வீரராய் மாறியாடிய
ஒருவர் வந்தார்- கான்மாறியாடிய பெருமானார் வந்தருளினார்.

     சாமரை, பிச்சம், கவிகை, கொடி ஆகிய காடு என்னலுமாம். முற்ற
என்னும் பாடத்திற்குச் சூழ என்பது பொருள். தான் : அசை. குரங்கல் -
வளைதல்;

"குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து"

என்பது சிலப்பதிகாரம். (26)

பல்லிய மொலிக்கு மார்ப்பும் பாய்பரி கலிக்கு மார்ப்புஞ்
செல்லொலி மழுங்க மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் சும்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே.

     (இ - ள்.) பல் இயம் ஒலிக்கும் ஆர்ப்பும் - பல இயங்களும்
ஒலிக்கின்ற ஒலியும், பாய் பரி கலிக்கும் ஆர்ப்பும் - பாய்கின்ற குதிரைகள்
கனைக்கும் ஒலியும், செல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் ஆர்ப்பும் -
முகிலின் இடியொலியும் மழுங்கும்படி வீரர்கள் உரப்பும் ஒலியும் - ஒன்றி -
கலந்து, கல்லெனும் சும்மைத்து ஆகி கலந்து எழுசேனை, கல்லென்னும்
ஓசையையுடையதாகிக் கலந்தெழுந்த சேனையானது, மேல் நாள் -
முன்னாளில், மல்லல் மாநகர்மேல் சீறி வருகடல் போன்றது - வளப்பமிக்க
பெரிய மதுரையின்மேற் சீறி வந்த கடலை ஒத்தது.

     தெழித்தல் - உரப்புதல்; அதட்டுதல். ஓசையாலும் பரப்பாலும் கடல்
போன்றது. மதுரையை நோக்கி வந்தமையின் முன்பு அங்ஙனம் வந்த
கடலைக் கூறினார். அன்று, ஏ : அசைகள். (27)

சேனையின் வரவு நோக்கித் திருமகன் திருமுன் னேகுந்
தானையந் தலைவன்* றெனனன் றாணிழல் குறுகிக் கூற
மீனவ னுவகை பூத்து வெயின்மணிக் கடையிற் போந்தங்
கானமண் டபத்திற் செம்போ னரியணை மீது வைகி.

     (இ - ள்.) சேனையின் வரவு நோக்கி - தானையின் வருகையைப்
பார்த்து, திருமகன் திருமுன் ஏகும் - அரச சமுகத்திற்குச் செல்லும், தானை
அம் தலைவன் - படைத் தலைவனாகிய சுந்தர சாமந்தன், தென்னன் தாள்
நிழல் குறுகிக் கூற - குலபூடண பாண்டியனது அடி நிழலை அடைந்து கூற,
மீனவன் உவகை பூத்து - அவ்வழுதியானவன் மகிழ்ந்து, வெயில்மணிக்
கடையில் போந்து - ஒளி பொருந்திய மணிகள் பதித்த கடைவாயிலில் வந்து,
அங்கு ஆன மண்டபத்தில் - அங்கு இருத்தற்கு அமைந்த மண்டபத்தின்


     (பா - ம்.) * தானையர் தலைவன்.