II


20திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     மலடியை மகப்பெறச் செய்தும் - மலடியைப் பிள்ளைப்பேறு அடையச்
செய்தும், கோணல் கூன் செவிடு ஊமை கண்குருடு பங்கு எவருங்
காணத்தீர்த்தும் - வளைந்த கூனும் செவிடும் ஊமையும் விழிக் குருடும்
முடமும் ஆகிய இவற்றை யாவருங் காணப் போக்கியும், நால் உலோகமும்
கனகமாச் செய்தும் - நான்கு உலோகங்களையும் பொன்னாகச் செய்தும்.

     நாலு லோகம் என்றது ஐந்து லோகத்துள் பொன் ஒழிந்த இரும்பு,
செம்பு, ஈயம், வெள்ளி என்பனவற்றை; ஐந்து லோகம் இவை யென்பதனை,

‘தமனியம் இரும்பு தாமிரம் ஈயம்
இரசிதம் பஞ்ச லோக மென்ப’  

என்னும் பிங்கலத்தானறிக. இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கும்
வித்தைக்கு இரசவாதம் என்று பெயர். (10)

செல்வர் தம்மனைப் பொருளெலாம் வறுமையிற் சிறந்தோர்
இல்ல மெய்தவு நட்டவ ரிகலின்றித் தம்மின்
மல்லு வெஞ்சம ரிழைப்பவுங் காஞ்சிர மரத்தின்
நல்ல தீங்கனி பழுப்பவும் விஞ்சைக ணயந்தும்.

     (இ - ள்.) செல்வர்தம் மனைப்பொருள் எலாம் வறமையில் சிறந்தோர்
இல்லம் எய்தவும் - செல்வர்கள் இல்லிலுள்ள பொருள்களனைத்தும்
வறுமையில் மிக்கோர் வீட்டிற்சென் றடையவும், நட்டவர் - நட்பினை
யுடையவர், இகல் இன்றி - பகையில்லாமல், தம்மில் மல்லு வெஞ்சமர்
இழைப்பவும் - தம்மிற் கொடிய மற்போர் புரியவும், காஞ்சிர மரத்தில் நல்ல
தீங்கனி பழுப்பவும் - எட்டிமரத்தில் நல்ல சுவையினையுடைய பழங்கள்
பழுக்கவும்; விஞ்சகள் நயந்தும் - வித்தைகள் செய்தும்.

     மல்லு, உகரம் சாரியை. எய்த இழைப்ப பழுப்ப விஞ்சைகள்
புரிந்தென்க. நயந்து - விரும்பி; செய்தென்னும் பொருட்டாயது. (11)

பருவ மாறிய பருவத்தில் வையைநீர் பரந்து
வருவ தாக்கியு மீளவும் வறந்திடச் செய்தும்
பொருவி றீஞ்சுவை யோடையும் பொய்கையு முவர்ப்புத்
தருவ வாக்கியு முவரியின் சுவையதாத் தந்தும்.

     (இ - ள்.) பருவம் மாறிய பருவத்தில் - காலமல்லாத காலத்தில்
வையை நீர் பரந்து வருவது ஆக்கியும் - வையையாறு நீர்பெருகி வருவதாகச்
செய்தும், மீளவும் வறந்திடச் செய்தும் - திரும்பவும் வற்றுமாறு செய்தும்,
பொருவுஇல் தீஞ்சுவை ஓடையும் பொய்கையும் உவர்ப்புத் தருவ ஆக்கியும் -
ஒப்பில்லாத இனிய சுவையினையுடைய ஓடையும் பொய்கையும் உவர்ப்புத்
தருவனவாகச் செய்தும்,உவரி இன்சுவையதாத் தந்தும் - கடல் இனிய
சுவையினை உடையதாகச் செய்தும்.      

     பருவமாறிய பருவம் - முதுவேனிற் பருவம். ஓடை, பொய்கை, உவரி
என்பன அவற்றின் நீரைக் குறிப்பன. தந்து -செய்தென்னும் பொருட்டாயது.
(12)