(இ
- ள்.) ஐய இவர் குலிங்கர் - ஐயனே இவர் குலிங்க நாட்டினர்;
ஐய இவர் கொங்கணர்கள் - ஐயனே இவர்கள் கொங்கண நாட்டினர்கள்;
ஐய இவர் தெலுங்கர் - ஐயனே இவர் தெலுங்கநாட்டினர்கள்; ஐய இவர்
சிங்களர்கள் - ஐயனே இவர்கள் சிங்களநாட்டினர்கள்; ஐய இவர் கலிங்கர் -
ஐயனே இவர் கலிங்க நாட்டினர்; ஐய இவர் கவுடத்தர் - ஐயனே இவர் கவுட
நாட்டினர்; ஐய உலம் கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் - ஐயனே திரண்ட கற்போலும்
புயத்தினையுடைய இவர்கள் ஒட்டிய நாட்டினர்கள். (31)
கொல்லரிவ
ரையவிவர் கூர்ச்சரர்க ளைய
பல்லரிவ ரையவிவர் பப்பரர்க ளைய
வில்லரிவ ரையவிவர் விதேகரிவ ரைய
கல்லொலி கழற்புனை கடாரரிவ ரைய. |
(இ
- ள்.) யை இவர் கொல்லர் - ஐயனே இவர் கொல்லநாட்டினர்;
ஐய இவர் கூர்ச்சரர்கள் - ஐயனே இவர்கள் கூர்ச்சர நாட்டினர்கள்; ஐய இவர் பல்லவர்
- ஐயனே இவர் பல்லவநாட்டினர்; ஐய இவர் பப்பரர்கள் - ஐயனே
இவர்கள் பப்பர நாட்டினர்கள்; ஐய இவர் வில்லர் - ஐயனே இவர்கள்
வில்லர்கள்; ஐய இவர் விதேகர் - ஐயனே இவர் விதேகநாட்டினர்; ஐய இவர்
கல் ஒலி கழல்புனை கடாரர் - ஐயனே இவர் கல்லென்னும் ஒலியையுடைய
வீரக்கழலையணிந்த கடார நாட்டினர்.
பல்லவர்
என்பது பல்லர் என நின்றது. வில்லர் - விற்கொடியை
யுடைய சேரரின் நாட்டினர். கல்லென்னு மொலி என்பது எல்லொலி என
நின்றது. (32)
கேகயர்க்
ளாலிவர்க்ள கேழ்கிளர் மணிப்பூண்
மாகதர்க ளாலிவர் மராடரிவர் காஞ்சி
நாகரிக ராலிவர்க ணம்முடைய நாட்டோர்
ஆகுமிவர் தாமெனமெய்க்* காட்டியறி வித்தான். |
(இ
- ள்.) இவர்கள கேகயர்கள் - இவர்கள் கேகயநாட்டினர்கள்;
கேழ்கிர் மணிப்பூண் இவர் மாகதர்கள் - ஒளி விளங்கும் மணிகள் பதித்த
அணிகளை யணிந்த இவர்கள் மகத நாட்டினர்கள்; இவர் மராடர் - இவர்
மராடநாட்டினர்; இவர்கள் காஞ்சிநாகரிகர் - இவர்கள் காஞ்சி நாட்டிலுள்ள
நாகரிகமுடையவர்கள்; இவர் நம்முடைய நாட்டோர் ஆகும் - இவர் நமது
நாட்டினராவர்; என என்று, மெய்க் காட்டி அறிவித்தான் - அவரவர்
உருவினைக் காட்டித் தெரிவித்தான்.
ஆல்
மூன்றும், தாம் என்பதும் அசைகள். காஞ்சி நாகரிகர் என்றது
சோழரை யாதல்வேண்டும். (33)
இத்தகைய
சேட்புல னுளாரையிவ ணுய்த்த
வித்தகைமை யென்னென வினாவியருள் செய்யேல்
அத்தநின் னரும்பொரு ளனைத்தும்வரை யாதே
உய்த்தலி னடைந்தனர்க ளாலென வுரைத்தான். |
(பா
- ம்.) * மெய்காட்டி.
|