II


மெய்க்காட்டிட்ட படலம்203



     தலைமை - முதன்மைக்குரிய பட்டம்; வேறு சிறந்த
வினைத்தலைமையுமாம். மெய்யைக் காட்டிய அளவானே புகழப்பெற்ற.
பதாதி - காலாள். செலுத்துகென்றான் : அகரந்தொக்கது. (38)

அறைந்தவார் கழற்காற் சேனை காவல னனிகந் தத்தஞ் சிறந்தசே ணாட்டிற் செல்லச் செலுத்துவான் போன்று நிற்ப நிறைந்தநான் மாடக் கூட னிருத்தனந் நிலைநின் றாங்கே மறைந்தனன் மனித்த வேடங்* காட்டிய மறவ ரோடும்.

     (இ - ள்.) அறை்நத வார்கழல் கால் சேனை காவலன் - ஒலிக்கின்ற
நீண்ட வீரக்கழலையணிந்த காலையுடை படைத்தலைவனாகிய சுந்தர
சாமந்தன், அனிகம் - சேனைகள், தத்தம் சிறந்த சேண் நாட்டில் செல்ல -
தத்தமக்குரிய சிறந்த சேய்மையிலுள்ள நாடுகளிற் செல்லுமாறு,
செலுத்துவான்போன்று நிற்ப - செலுத்துவான்போன்று நிற்ப -
செலுத்துகின்றவனைப்போலப் பாவனை செய்துநிற்க, நிறைந்த நான்மாடக்
கூடல் நிருத்தன் - பெருமை நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும்
சோமசுந்தரக்கடவுள், அந்நிலை நின்றாங்கே - அங்கு நின்றபடியே, மனித்த
வேடம் காட்டிய மறவரோடும் மறைந்தனன் - மனித வேடம் காட்டிய
வீரராகிய சிவ கணங்களோடும் மறைந்தருளினான்.

     நிறைந்த என்பதனை நிருத்தனுக்கேற்றி யுரைத்தலுமாம். அங்கே
தோன்றி நின்றாற்போன்றே மறைந்தனன் என்க. நின்று ஆங்கே எனப்
பிரித்து, அந்நிலை நின்றும் அப்பொழுதே மறைந்தனன் என்னலுமாம். (39)

கண்டனன் பொருநை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை கொண்டனன் குறித்து நோக்கி யீதுநங் கூடன் மேய அண்டர்தம் பெருமான் செய்த வாடலென் றெண்ணிக் கண்ணீர் விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவ மானான்.

     (இ - ள்.) பொருநைநாடன் கண்டனன் வியந்தனன் - பொருநை யாறு
சூழ்ந்த நாட்டினையுடைய குலபூடண பாண்டியன் இதனைக் கண்டு வியந்து,
கருத்து ஆசங்கை கொண்டனன் - கருத்தில் ஐயுறவு கொண்டு, குறித்து
நோக்கி - உய்த்துணர்ந்து, ஈது நம் கூடல் மேய அண்டர் தம் பெருமான்
செய்த ஆடல் என்று எண்ணி - இது நமது கூடலில் வீற்றிருக்குந்
தேவதேவனாகிய சோமசுந்தரக் கடவுள் செய்களில் ஆனந்த அருவி
பொழியப் பெற்று, மெய்புளகம் போர்ப்ப அன்பு வடிவம் ஆனான் - உடல்
முழுதும் புளகம் மூட அன்பே வடிவமாயினன்.

     முதற்கண் வியப்பும் ஐயமும் எய்தியவன் பின்பு குறித்து நோக்கி
ஆடல் என்று துணிந்து அன்பு வடிவமானான் என்க. எண்ணி - துணிந்து
என்னும் பொருட்டு. கண்டனன் முதலிய முற்றுக்கள் நான்கும் எச்சமாயின.
தம் : சாரியை; மெய் என்பதனை அன்புடன் கூட்டி, உண்மையன்பு
என்னலுமாம். (40)


     (பா - ம்.) * மனித வேடம்.