II


உலவாக்கிழியருளிய படலம்205



முப்பத்தொன்றாவது உலவாக்கிழியருளிய படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
அடியார் பொருட்டுப் பரிவயவ ராகிச் செழியன் காணவிடைக்
கொடியார் வந்து மெய்க்காட்டுக் கொடுத்த வண்ண
                                   மெடுத்துரைத்துங்
கடியார் கொன்றை முடியாரக் கன்னி நாடன் றனக்கிசைந்த
படியா லுலவாக் கிழிகொடுத்த படியை யறிந்த படிபகர்வாம்.

     (இ - ள்.) விடைக்கொடியார் - இடபக்கொடியையுடைய சோம
சுந்தரக் கடவுள், அடியார் பொருட்டு - அடியாராகிய சாமந்தர் பொருட்டு,
பரிவயவராகி - குதிரை வீரராகி, செழியன் காணவந்து - பாண்டியன்
காணுமாறு வந்து, மெய்க் காட்டுக் கொடுத்த வண்ணம் எடுத்து உரைத்தும் -
மெய்க்காட்டுக் கொடுத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்; கடி ஆர்
கொன்றை முடியார் - (இனி) மணம் நிறைந்த கொன்றை வேணியராகிய
அவரே, அக்கன்னி நாடன் தனக்கு இசைந்த படியால் - அப்பாண்டி நாடன்
தனக்கு மனமொத்த அன்பனானபடியினால், உலவாக்கிழி கொடுத்த படியை -
(அவனுக்கு) உலவாக்கிழி அளித்த திருவிளையாடலை, அறிந்தபடி
மொழிவாம் - அறிந்தவாறு கூறுவாம்.

     உரைத்தும் - உரைத்தாம். கன்னி நாடனுக்குப் பொருந்தியவாறு
கொடுத்தபடி என்றலுமாம். உலவாக்கிழி - எடுக்கக் குறையாத பொன்
முடிப்பு. (1)

வற்றல் குலபூ டணன்றிங்கள் வாரந் தொடுத்துச் சிவதருமம்
உள்ள வெல்லாம் வழாதுநோற் றொழுகும் வலியாற் றன்னாட்டில்
என்ன லில்லா வேதியரை யிகழ்ந்தா னதனான் மழைமறுத்து
வெள்ள மருக வளங்குன்றி விளைவஃ கியது நாடெல்லாம்.

     (இ - ள்.) வள்ளல் குலபூடணன் - வள்ளலாகிய குலபூடண
பாண்டியன், திங்கள்வாரம் தொடுத்துச் சிவதருமம் உள்ள எல்லாம் -
சோமவார விரதம் முதலாக உள்ள சிவபுண்ணியங்களனைத்தையும்,
வழாது நோற்று ஒழுகும் வலியால் - தவறாமல் நோற்று நடக்கும்
வன்மையினால், தன் நாட்டில் எள்ளல் இல்லா வேதியரை இகழ்ந்தான் -
தனது நாட்டிலுள்ள இகழ்தற்குரியரல்லாத மறையோரை அவமதித்தான்;
அதனால் மழை மறுத்து வெள்ளம் அருக - அதனாலே மதைு
பெய்யாதொழிதலால் நீர்ப்பெருக்குக் குறைய, நாடு எல்லாம் விளைவு
அஃகி வளங்குன்றியது - நாடுமுழுதும் விளைவு சுருங்கி வளங்
குறைந்தது.