II


206திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     திங்கள் வாரம், நோன்பிற்கு ஆகு பெயர். தொடுத்து - தொடங்கி,
திங்கள் வாரந் தொடுத்து என்றும், நோற்று என்றும் கூறினமையால்
சிவதருமம் என்றது சிவ விரதங்களைக் குறிக்கும். நோற்றமையாலே
தருக்குற்று இகழ்ந்தானென்க. எள்ளலில்லாவேதியர் மறைகளை யுணர்ந்து
அந்நெறி யொழுகும் சிறப்பினையுடைய அந்தணர். மழை வளந்தரும்
அழலோம்பாளரை இகழ்ந்தமையின் அவர் அழலோம் புதலைக் கைவிட
அதனால் மழை மறுத்ததென்க. மறுத்தலால் என்பது மறுத்து எனத் திரிந்து
நின்றது. விளைவஃகி வளங்குன்றியது என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது.
(2)

அறவோ ரெல்லாம் நிரப்பெய்தி யாகங் கிடந்த நூலன்றி
மறைநூ லிழந்து முனிவேள்வி வானோர் வேள்வி                                    தென்புலத்தின்
உறைவோர் வேள்வி யிழந்திழிந்த தொழல்செய் தாற்றா
                                 துயிர்வளர்ப்பான்
புறநா டணைந்தார் பசியாலே புழுங்கி யொழிந்த                                    குடியெல்லாம்.

     (இ - ள்.) அறவோர் எல்லாம் நிரப்பு எய்தி - அந்தணரெல்லாம்
வறுமையுற்று, ஆகம் கிடந்த நூல் அன்றி மறைநூல் இழந்து - மார்பிற்
கிடந்த பூணூலன்றி வேதமாகிய நூலை இழந்து, முனிவேள்வி வானோர்
வேள்வி தென்புலத்தின் உறைவோர் வேள்வி இழந்து முனிவர் வேள்வியும்
தேவர் வேள்வியும் பிதிரர் வேள்வியுமாகிய இவற்றைக் கை விட்டு, ஆற்றாது
- வறுமைத் துன்பம் பொறுக்காது, இழிந்த தொழில் செய்து உயிர் வளர்ப்பான்
புறநாடு அணைந்தார் - இழிவாகிய தொழிலைச் செய்தேனும் உயிரினை
ஓம்புதற்பொருட்டு வேற்று நாடு சென்றனர்; ஒழிந்த குடி எல்லாம் பசியாலே
புழுங்கி - அவரொழிந்த குடிகளெல்லாம் பசியினாலே மனம் புழுங்கி.

     அறவோர் - அறநெறி யொழுகுவோர். நிரப்பு, எதிர்மறை
யிலக்கணையாக வறுமையைக் குறிக்கும் பெயர். அவரை வேதியரெனக்
காட்டுதற்குப் பூணூலன்றிப் பிறிதொன்று மிலதாயிற்று என நகை தோன்றக்
கூறினார். முனி வேள்வி முதலாயின அவ்வவர்க்கு இறுக்கப்படும் கடன்கள்.
முனிவா கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்
கடன் புதல்வரைப் பெறுதலானும் இறுக்கப்படும் என்பர்;

"வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்"

எனப் பதிற்றுப்பத்துக் கூறுவது காண்க. (3)

எந்நா டணைவோ மெனவிரங்க விரங்கி மதிக்கோன்                                    மதிநாளிற்
பொன்னாண் முளரித் தடங்குடைந்து சித்திக் களிற்றைப்                                       பூசித்துத்
தன்னா தரவாற் கயற்கண்ணி தலைவன் றன்னை யருச்சித்து
முன்னா வீழ்ந்து கரமுகிழ்த்துப் பழிச்சி மகிழ்ந்து                                    மொழிகின்றான்.