(இ
- ள்.) எந்நாடு அணைவோம் என இரங்க - எந்த நாட்டிற்குச்
செல்வோம் என்று வருந்த, மதிக்கோன் இரங்கி - திங்கள் மரபினனாகிய
குலபூடணன் மனங் கவன்று, மதிநாளில் - திங்கட்கிழமையில், நாள் பொன்
முளரித் தடம் குடைந்து - அன்றலர்ந்த மலர்களையுடைய பொற்றாமரை
வாவியில் நீராடி, (சித்திக் களிற்றை பூசித்து - சித்தி விநாயகனை வணங்கி,
தன் ஆதரவால் - தனது அன்பினால், கயல் கண்ணி தலைவன் தன்னை
அருச்சித்து - அங்கயற்கண்ணி தலைவனாகிய சோமசுந்தரக்கடவுளை
அருச்சித்து, முன்னா வீழ்ந்து - திருமுன் வீழ்ந்து, கரம் முகிழ்த்து - கை
கூப்பி, பழிச்சி மகிழ்ந்து மொழிகின்றான் - துதித்து மகிழ்ந்து கூறுகின்றான்.
அரசன்
மன்னுயிர்களைத் தன்னுயிர்போற் கருதுபவ னாகலின் இரங்க
இரங்கி என்றார். முன்னா - முன்னாக. வீழ்ந்து பின் எழுநது கரமுகிழ்த்து
என விரிக்க. (4)
அத்த வுலகி
லுயிர்க்குயிர்நீ யல்லை யோவவ் வுயிர்பசியால்
எய்த்த வருத்த மடியேனை வருத்து மாறென் யானீட்டி
வைத்த நிதியந்* தருமத்தின் வழியே சென்ற தினியடிகள்
சித்த மலர்ந்ததென் னிடும்பைவினை தீர வருட்கண் செய்கவென. |
(இ
- ள்.) அத்த - ஐயனே, உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ
- உலகின்கண் உள்ள உயிர்களுக்கு உயிரா யுள்ளவன் நீ யல்லவோ,
அவ்வுயிர் பசியால் எய்த்த வருத்தம் அடியேனை வருத்துமாறு என் - அந்த
உயிர்கள் பசியால் இளைத்த வருத்தம் (தேவரீரைச் சாராது) அடியேனைச்
சார்ந்து வருத்துங் காரணம் யாது, யான் ஈட்டிவைத்த நிதியம் தருமத்தின்
வழியே சென்றது - யான் தேடிவைத்த பொருள் முழுதும் சிவபுண்ணிய
நெறியிலே செலவாயது; அடிகள் - தேவரீர், இனி சித்தம் மலர்ந்து என்
இடும்பை வினைதீர - இனித் திருவுள்ளமலர்ந்து எனது துன்ப வினை
நீங்குமாறு, அருள்கண் செய்க என - திருவருள் நோக்கம் செய்தருளுக
என்று குறையிரக்க.
உயிர்கட்கெல்லாம்
உயிராகிய நீயே அவ்வுயிர்களின் வருத்தத்தையும்
அதனால் யானெய்தும் துன்பத்தையும் போக்கி யருளவேண்டுமென இரந்தான்.
என்னால் இயலுமளவு பொருளீட்டி அறம் புரிந்தேன்; பொருளும் சென்றது;
இனி யான் செய்யலாவ தொன்றில்லை என விரித்துக் கொள்க. நீ எனவும்
அடிகள் எனவும் ஒருமையும் பன்மையும் விரவி வந்தன. நிதியம், அம் :
சாரியை. (5)
கோளா டரவம ரைக்கசைத்த கூடற் பெருமான் குறையிரக்கும்
ஆளா மரசன் றவறுசிறி தகங்கொண் டதனைத் திருச்செவியிற்
கேளார் போல வாளாதே யிருப்ப மனையிற் கிடைத்தமலன்
தாளா தரவு பெறநினைந்து தரையிற் கிடந்து துயில்கின்றான். |
(இ
- ள்.) கோள் ஆடு அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான்
- கொலைத் தொழிலையுடைய ஆடு பாம்பினை அரையிற் கட்டி யருளிய
(பா
- ம்.) * வைத்த பொருளும்.
|