சோமசுந்தரக் கடவுள்,
குறை இரக்கும் ஆளாம் அரசன் - குறையிரவா நின்ற
அடியனாகிய அரசனது, தவறு சிறிது அகம் கொண்டு - தவற்றினைச் சிறிது
திருவுள்ளத்திற் கொண்டு, அதனைத் திருச் செவியில் கேளார்போல வாளாது
இருப்ப - அவள் மொழியைத் தனது திருச் செவியிற் கேளாதவர் போலச்
சும்மா இருப்ப, மனையில் கிடைத்து - மன்னன் தனது மாளிகையிற் சென்று,
அமலன் தாள் ஆதரவுபெற நினைந்து - இறைவனது திருவடியை அன்புமிகச்
சிந்தித்து, தரையில் கிடந்து துயில்கின்றான் - தரையிற் படுத்து
உறங்குவானாயினன்.
கோள்
என்பதற்கு வலிமை என்றும் ஆடு என்பதற்குக் கொலை
என்றும் உரைத்தலுமாம். இரக்கும் அரசன் ஆளாம் அரசன் எனத் தனித்தனி
இயையும். வாளா என்னும் சொல் வாளாது வாளாங்கு என்றிங்ஙனம் திரிந்தும்
வழங்கும். கிடைத்து - அடுத்து. (6)
அங்கண் வெள்ளி
யம்பலத்து ளாடு மடிக ளவன்கனவிற்
சங்கக் குழையும் வெண்ணீறுஞ் சரிகோ வணமுந் தயங்கவுரன்
சிங்க நாதங் கிடந்தசையச் சித்த வடிவா யெழுந்தருளிய
வெங்கண் யானைத் தென்னவர்கோன் முன்னின் றிதனை விளம்புவார்.
|
(இ
- ள்.) அங்கண் - அப்பொழுது, வெள்ளி அம்பலத்துள் ஆடும்
அடிகள் - வெள்ளியம்பலத்திலே திருநடம் புரியும் சோமசுந்தரக் கடவுள்,
அவன் கனவில் - அவனது கனவின்கண், சங்கக்குழையும் - சங்கினாலாய
குண்டலமும், வெள்நீறும் - வெள்ளிய திருநீறும், சரிகோவணமும் - சரிந்த
கோவணவுடையும், தயங்க - விளங்கவும், உரன் சிங்கநாதம கிடந்து அசைய
மார்பின்கண் சிங்க நாதம் கிடந்து அசையவும், சித்தவடிவாய் எழுந்தருளி -
சித்தமூர்த்தியாக எழுந்தருளி, வெங்கண் யானைத் தென்னவர்கோன்
முன்நின்று இதனை விளம்புவார் - தறுகண்மையுடைய யானையையுடைய
பாண்டிவேந்தனாகிய குலபூடணன் முன்னே நின்று இதனைக்
கூறியருளுகின்றார்.
சிங்க
நாதம் - கொம்பினாற் செய்யப்பட்ட ஒருவகைத் துளைக் கருவி.
தென்னவர்கோன் : சுட்டு. அடிகள் அவன் களவில் எழுந்தருளி முன்னின்று
இதனை விளம்புவார் என்க. (7)
ஏடா ரலங்கல்
வரைமார்ப வெம்பா லென்று மன்புடைமை
வாடா விரத விழுச்செல்வ முடையாய் வைய மறங்கடிந்து
கோடா தளிக்குஞ் செங்கோன்மை யுடையா யுனக்கோர் குறையுளதுன்
வீடா வளஞ்சேர் நாட்டிந்நாள் வேள்விச் செல்வ மருகியதால். |
(இ
- ள்.) ஏடு ஆர் அலஙகல் வரைமார்ப - இதழ்கள் நிறைந்த மலர்
மாலையணிந்த மலை போலும் மார்பினை உடையானே, என்றும் எம்பால்
அன்பு உடைமை - எப்பொழுதும் என்னிடம் அன்புடைமையும், வாடா
விரதம் - கெடாத விரதமும் ஆகிய, விழுச்செல்வம் உடையாய் - சிறந்த
செல்வத்தினை உடையவனே, வையம் மறம் கடிந்து கோடாது அளிக்கும்
|