அந்த மறைக டமக்குறுதி யாவா ரந்நூல் வழிகலிநோய்
சிந்த மகத்தீ வளர்த்தெம்பாற் சிந்தை செலுத்து மந்தணரால்
இந்த மறையோர் வேள்விமழைக் கேது வாகு மிவர்தம்மை
மைந்த விகழ்ந்து கைவிட்டா யதனான் மாரி மறுத்தன்றால்.
|
(இ
- ள்.) அந்த மறைகள் தமக்கு உறுதியாவார் - அந்த
வேதங்களுக்கு உறுதி யாவார், அந்நூல் வழி - அந்த வேதநூல் வழியே,
கலி நோய் சிந்த மகத்தீ வளர்த்து - கலித்துன்பம் கெடுமாறு வேள்வித்
தீயினை வளர்த்து, எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணர் - எம்மிடத்துச்
சிந்தையைச் செலுத்துகின்ற அநத்ணராவர்; இந்த மறையோர் வேள்வி
மழைக்குஏதுவாகும் - இவ்வந்தணர் வேட்கும் வேள்வியே மழைக்குக்
காரணமாகும்; மைந்த இவர் தம்மை இகழ்ந்து கை விட்டாய் -
மைந்தனே நீ இவர்களை இகழ்ந்து கை விட்டனை, அதனால் மாரி
மறுத்தன்று - அதனால் மழை பெய்யா தொழிந்தது.
உறுதியாவார்
- பாது காவலாவார். சிந்தை செலுத்தல் - தியானித்தல்.
மறுத்தன்று, உடன்பாட்டு வினைமுற்று ஆல் இரண்டும் அசை. (11)
மும்மைப்
புவனங் களுமுய்ய முத்தீ வேட்கு மிவர்தம்மை
நம்மைப்போலக் கண்டொழுகி நாளு நானா வளம்பெருக்கிச்
செம்மைத் தருமக் கோலோச்சித் திகிரி யுருட்டி வாழ்தியென
உம்மைப் பயன்போ லெளிவந்தா ருலவாக் கிழியொன் றுதவுவார்.
|
(இ
- ள்.) மும்மைப் புவனங்களும் உய்ய - மூன்று உலகங்களும்
உய்திபெற, முத்தீ வேட்கும் இவர் தம்மை - மூன்று தீயையும் வளர்க்கும்
இவ்வந்தணரை, நம்மைப்போல கண்டு ஒழுகி நம்மைப்போலவே கருதி
ஒழுகி, நாளும் நானாவளம் பெருக்கி - எப்பொழுதும் பல வளங்களையும்
பெருகச் செய்து, தருமம் செய்மமைகோல் ஓச்சித் திகிரி உருட்டி -
அறவடிவான செங்கோலைச் செலுத்தி ஆக்கினா சக்கிரத்தை நடத்தி,
வாழ்தி என - வாழ்வாயாக வென்று, உம்மைப்பயன்போல் எளிவந்தார் -
முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன்போல எளிவந்த அவ்விறைவர்.
உலவாக்கிழி ஒன்று உதவுவார் - உலவாக்கிழி ஒன்று தந்தருளுவார்.
மும்மை
- மூன்று; மை பகுதிப்பொருள் விகுதி. முத்தீ - காருக
பத்தியம், ஆகவனீயம், தென்றிசையங்கி என்பன. சிவனை வழிபடும்
திருமறையோராகலின் அவரைச் சிவனைப்போற் காணவேண்டும்
என்றவாறு. உம்மை - முற்பிறப்பு; தவத்திற்காயிற்று. (12)
இந்தக் கிழியி
லெத்துணைப்பொன் னெடுத்து வழங்குந் தொறுநாங்கள்
தந்த வளவிற் குறையாத தன்மைத் தாகு மிதுகொண்டு*
வந்த விலம்பா டகற்றென்று கொடுத்து வேந்தன் மனக்கவலை
சிந்தித் திருநீ றதுசாத்தி மறைந்தா ரையர் திருவுருவம். |
(பா
- ம்.) * அதுகொண்டு.
|