II


உலவாக்கிழியருளிய படலம்211



     (இ - ள்.) இந்தக் கிழியில் எத்துணைப்பொன் எடுத்து வழங்கும்
தொறும் - இந்தப் பொற்கிழியில் எவ்வளவு பொன்னாயினும் எடுத்து வழங்குந்
தோறும், நாங்கள் தந்த அளவில் குறையாத தன்மைத்து ஆகும் - அது நாம்
கொடுத்த அளவினின்றும் குறையாத தன்மை யுடையதாகும்; இது கொண்டு
வந்த இலம்பாடு அகற்று என்று கொடுத்து - இதனைக்கொண்டு வந்த
வறுமையைப் போக்குவாயாக என்று கொடுத்தருளி, வேந்தன் மனக்கவலை
சிந்த - மன்னனது மனக்கவலைகெட, திருநிறு சாத்தி - திருநீறு தரிப்பித்து,
ஐயர் திரு உருவம் மறைந்தார் - இறைவர் திருவுருக்கரந்தருளினார்.

     எத்துணைப்பொன் எடுத்து வழக்கினும் வழங்குந்தோறும் என
விரித்துரைக்க. நாம் என்பது நாங்கள் என நின்றது. திருநீறது, அது :
பகுதிப்பொருள் விகுதி. (13)

கண்ட கனவு நனவாகத் தொழுதா னெழுந்து கௌரியர்கோன்
அண்டர் பெருமான் றிருவடிபோலம்பொற் கிழியை                                     முடித்தலைமேற்
கொண்டு மகிழ்ச்சி தலைசிறப்ப நின்றோர் முகூர்த்தங் கூத்தாடித்
தண்டா வமைச்சர் படைத்தலைவர் தமக்குங் காட்டி                                         யறைவித்தான்.

     (இ - ள்.) கௌரியர்கோன் கண்ட கனவு நனவு ஆக எழுந்து
கண்டதொழுதான் - குலபூடண பாண்டியன் தான் கனவு நனவாக எழுந்து
வணங்கி, அண்டர் பெருமான் திருவடிபோல் - தேவ தேவனாகிய
சோமசுந்தரக் கடவுளின் திருவடியைப் போல, அம் பொன்கிழியை முடித்
தலைமேல் கொண்டு - அழகிய பொன் முடிப்பினை முடியினை யணிந்த
தலைமேற் கொண்டு, மகிழ்ச்சி தலைசிறப்ப நின்று - மகிழ்ச்சி மேலோங்க
நின்று, ஓர் முகூர்த்தம் கூத்து ஆடி - ஒரு முகூர்த்தநேரம் வரை
ஆனந்தக்கூத்தாடி, தண்டா அமைச்சர் படைத்தலைவர் தமக்கும் காட்டி
அறிவித்தான் - நீங்காத மந்திரிகளுக்கும் படைத்தலைவர்களுக்கும் அதனைக்
காண்பித்து நிகழ்ந்த செய்தியைத் தெரிவித்தான்.

     விழித்தவுடன் கனவிற் கண்டவாறே தனது நெற்றியில் திருநீறு சாத்தப்
பெற்றிருந்ததனாலும், உலவாக்கிழ கைவரப் பெற்றமையாலும் ‘கண்டகனவு
நனவாக’ என்றார். சிவபெருமான் திருவடியைத் தனது முடிமேற்
கொள்ளுமாறுபோல அவன் திருவருளாற் கிடைத்த கிழியையும் முடிமேற்
கொண்டான் என்க. அமைச்சர் அரசனை நீங்கா ராகலின் ‘தண்டா வமைச்சர்’
என்றார்; "உழையிருந்ததான்" என்று தெய்வப் புலவர் கூறுதலுங் காண்க. (14)

செங்க ணரிமான் பிடர்சுமந்த தெய்வ மணிப்பூந் தவிசேற்றிச்
சங்க முழங்க மறைமுழங்கச் சாந்தந் திமிர்ந்து தாதொழுகத்
தொங்க லணிந்து தசாங்கவிரைத் தூப நறுநெய்ச் சுடர்வளைத்துக்
கங்கை மிலைந்த கடவுளெனக் கருதிப் பூசை வினைமுடித்தான்.

     (இ - ள்.) செங்கண் அரிமான்பிடர் சுமந்த - சிவந்த கண்களையுடைய
சிங்கத்தின் பிடர் சுமந்த, தெய்வமணிப் பூந்தவிசு ஏற்றி - தெய்வத் தன்மை