II


212திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பொருந்திய மணிகளிழைத்த அழகிய ஆதனத்தில் ஏற்றி, சங்கம் முழங்க -
சங்கள்கள் (ஒரு பால்) முழங்கவும், மறை முழங்க - வேதம் (ஒருபால்)
ஒலிக்கவும், சாந்தம் திமிர்ந்து - சந்தனக் குழம்பைப் பூசி, தாது ஒழுகத்
தொங்கல் அணிந்து - மகரந்தஞ் சிந்த மாலையைச் சூட்டி, தசாங்கம்
விரைத்தூபம் நறுநெய்ச் சுடர் வளைத்து - தசாங்கத் தாலாகிய நறும்
புகையினையும் நறுமணங் கமழும் நெய் விளக்கினையும் விளைத்து, கங்கை
மிலைந்த கடவுளெனக் கருதி - கங்கையைத் தரித்த சோமசுந்தரக்
கடவுளெனக் கருதி - கங்கையைத் தரித்த சோமசுந்தரக் கடவுளைப்போல
அவ் வுலவாக்கிழியைக் கருதி, பூசைவினை முடித்தான் - பூசையாகிய
தொழிலை முற்றுவித்தான்.

     தசாங்கம் - சந்தனம் அகில் முதலிய பத்துவகைப் பொருள் கலந்தது;
தசாங்க உபசார மென்றுரைப் பாருமுளர்; தசாங்க வுபசார மாவன :
ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவ குண்டனம்,
தேனுமுத்திரை, பாத்தியம் ஆசமனீயம், அருக்கியம், புட்பதானம் என்பன. (15)

அடுத்து வணங்கி வலஞ்செய்திட் டம்பொற் கிழியைப்                                       பொதிநீக்கி
எடுத்து முத் வினைஞர்க்கும் யாகங் களுக்கும் யாவர்க்கும்
மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க வடியார்க்குக்
கொடுக்கக் குறையா வீட்டினப் மாயிற் றையர் கொடுத்தகிழி.

     (இ - ள்.) அடுத்து வணங்கி வலஞ் செய்திட்டு - நெருங்கி வணங்கி
வலஞ்செய்து, அம்பொன் கிழியைப் பொதி நீக்கி எடுத்து - அழகிய பொன்
முடிப்பைக் கட்டவிழ்த்து எடுத்து, முத்தீவினைஞர்க்கும் யாகங்களுக்கும்
யாவர்க்கும் மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க - முத்தீயினை ஓம்பும்
அந்தணர்கட்கும் வேள்விகளுக்கும் அனைவருக்கும் முகந்து நாள்தோறும்
வரைவின்றிக் கொடுக்கக் கொடுக்க, ஐயர் கொடுத்த கிழி -
சோமசுந்தரக்கடவுள் கொடுத்த அப் பொற்கிழியானது, அடியார்க்குக்
கொடுக்கக் குறையா வீட்டு இன்பம் ஆயிற்று - அடியார்கட்குக் கொடுத்தலாற் குறைவுபடாத முத்தி யின்பம் போலாயிற்று.

     எடுத்து மடுத்து வழங்கவென்க. தீவினைஞர் - தீ வளர்த்தலாகிய
தொழிலையுடையார். அடுக்கு பன்மைப் பொருட்டு. சிவபோகமாகிய
வீட்டின்பமானது எல்லையற்ற பூரணமாகலின் எண்ணிறந்த அடியார்கள்
நுகரினும் அது குறைவின்றியே யுள்ளதாகும். இன்பமாயிற்று - இன்பம்
போல்வதாயிற்று. (16)

ஆய பொதியில் விளைபொன்னா* லசும்பு செய்து விசும்பிழிந்த
கோயி லதனை யகம்புறமுங் குயின்று ஞானக் கொழுந்தனைய
தாயி லறுகாற் பீடிகைவான் றடவு கொடிய நெடியபெரு
வாயில் பிறவு மழகெறிப்ப வேய்ந்தான் மறையின்                                        வரம்பறிந்தான்.

     (இ - ள்.) ஆய பொதியில் விளை பொன்னால் - அந்த உலவாக்
கிழியில் விளைந்த பொன்னினால், அசும்பு செய்து விசும்பு இழிந்த கோயில்
அதனை - ஒளி வீசி விண்ணினின்று மிழிந்த இந்திர விமானத்தை, அகம்


     (பா - ம்.) * வளை பொன்னால்.