II


வளையல்விற்ற படலம்217



விள்ளுங் கமலச் சேவடிசூழ் சிலம்பி னொலியு மிடறதிரத்
துள்ளுங் கீத வொலியுங்கைத் துடியி னொலியுஞ்                                 செவித்துளைகீண்
டுள்ளம் பிளந்து நிறைகளைந்தீர்த் தொல்லை வருமுன்                                 வல்லியர்கள்
பள்ளங் கண்டு வருபுனல்போற் பலிகொண் டில்லின்                                 றம்போந்தார்.

     (இ - ள்.) விள்ளும் கமலச் சேவடிசூழ் சிலம்பின் ஒலியும் - மலர்ந்த
தாமரை மலர்போன்ற சிவந்த திருவடியிற் சூழ்ந்த சிலம்பின் ஒலியும், மிடறு
அதிரத் துள்ளும் கீதவொலியும் - திருமிடறானது துடிக்கத் துள்ளுகின்ற கீத
ஒலியும், கைத்துடியின் ஒலியும் - திருக்கரத்திலேந்திய உடுக்கையின் ஒலியும்,
செவித்துளை கீண்டு - செவியின் துளையைக் கிழித்து, உள்ளம் பிளந்து -
மனத்தை ஊடறுத்து, நிறை களைந்து ஈர்த்து ஒல்லை வருமும் - நிறையினைப்
போக்கி இழுத்து விரைய வருதற்கு முன்னரே, வல்லியர்கள் - அம்முனி
பன்னியர்கள், பள்ளம் கண்டு வருபுனல்போல் - பள்ளத்தைக் கண்டு
வருகின்ற நீரைப் போல, பலிகொண்டு இல்லின் புறம் போந்தார் -
பலியினைக் கொண்டு மனையின் புறத்தே வந்தார்கள்.

     செவித் துளையில் மண்டிச் சென்றதனை ‘செவித்துளை கீண்டு’ என்றும்,
உள்ளத்தை வெளி செய்ததனை ’ உள்ளம் பிளந்து’ என்றும் கூறினார். இவ்
வொலிகள் செவி வழியே உள்ளம் புகுமுன் வல்லியர் நிறையினை யிழந்து
விரைந்து பலிகொண்டு புறம் போந்தார் என்பது கருத்தாகக் கொள்க.
தடுமாற்ற முற்று விரைந்து வருதலின் ‘பள்ளங் கண்டு வருபுனல போல்’
என்றார். (4)

[- வேறு]
ஐயங்கொண் டணைவா ரையர் பரிகலத் தைய மன்றிக்
கையம்பொன் வளையும் பெய்வார் கருத்துநா ணன்றிக் காசு
செய்யும்பொன் மருங்கு னாணு மிழப்பர்வேள் சிலையம் பன்றிக்
கொய்யுந்தண் மலர்க்க ணம்புங் கொங்கையிற் சொரியச்                                           சோர்வார்.

     (இ - ள்.) ஐயம் பொண்டு அணைவார் - அங்ஙனம் பலிகொண்டு
வருபவராகிய அம்முனி பன்னியர், ஐயர் பரிகலத்து ஐயம் அன்றி -
இறைவனது பலி ஏற்குங் கலத்தின்கண் அப்பலியை யன்றி, கை அம் பொன்
வளையும் பெய்வார் - கையிலணிந்த அழகிய பொன்னாலாகிய வளையலையும்
சொரிவார்கள்; கருத்து நாண் அன்றி - மனத்தின்கண் இழப்பர் - மணிகள்
அழுத்திய பொன்னாலாகிய இடை நாணையு மிழப் பார்கள்; வேள்சிலை அம்பு
அன்றி - மன்மதனது வில்லிலிருந்து வரும் கணைகளன்றி, கொய்யும் தண்
மலர்க்கண் அம்பும் - கொய்யப் பெறுகின்ற தண்ணிய மலர்போன்ற
கண்களினின்றும் வரும் அம்பும், கொங்கையில் சொரியச் சோர்வார் - தம்
கொங்கைகளிற் சிந்த நிலை தளர்வார்கள்.