(இ
- ள்.) எல் இடைப்படும் பொருள்களை இரா எழப் பார்த்தும் -
பகலிற்றோன்றும் பொருள்களை இரவிற் றோன்றுமாறு பார்த்தருளியும், அல்
இடைப்படும் பொருள்களைப் பகல்வர அமைத்தும் - இரவிற் றோன்றும்
பொருள்களைப் பகலில் வரச செய்தும், வல் அழல் புனல் உளர்வளி
வலிகெடப் பார்த்தும் - வலிய நெருப்பும் நீரும் அசைகின்ற காற்றுமாகிய
இவைகளின் வலிகெடப் பார்த்தருளியும், நல்ல போது காய் கனி இலா நாள்
படக் கண்டும் - நல்ல மலரும் காயும் கனியும் இல்லாத நாளில் உண்டாகச்
செய்தும்.
பகலிற்
றோன்றுவன ஞாயிறு முதலியன. இரவிற்றோன்றுவன திங்கள்
முதலியன. வலிகெடப் பார்த்தல் - எரித்தல் நனைத்தல் அசைத்தல் முதலிய
இயல்பினை இழக்கச் செய்தல். இல்லா நாள் - உரியவல்லாத நாட்கள்,
பார்த்து, கண்டு என்பன செய்து என்னும் பொருளன. (15)
பீளை கால்விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடிக்
காளை யாடவ ராக்கியக் கணவருக் கிசைய
ஈளை வாய்முது கற்பினார் கருவடைந் திளமை
ஆள வேத்திரம் வருடி நீ றளித்தருள் செய்தும்.
|
(இ
- ள்.) பீளை கால்விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடி - பீளை
ஒழுகும் விழியினை யுடைய விருத்தரைப் பிரம்பினால் நீவி, காளை ஆடவர்
ஆக்கி - காளைப்பருவத்தினையுடைய ஆடவராகச் செய்து, அக்கணவருக்கு
இசைய - அந்நாயகருக்குப் பொருந்த, ஈளைவாய் முது கற்பினார் - ஈளை
வாய்ந்த முதுமைப் பருவத்தினையுடைய கற்பிற் சிறந்த அவர் மனைவியர்,
கரு அடைந்து இளமை ஆள - கருவுற்று இளமைப் பருவத்தை அடையுமாறு,
வேத்திரம் வருடி நீறு அளித்து அருள் செய்தும் - பிரம்பினாலே தடவித்
திருநீறு அளித்துக் கருணை புரிந்தும்
கிழவர்
என்னுஞ் சொல் உரியவர் என்னும் பொருளில் முன்பு வழங்கிப்
பின்பு முதியோரைக் குறிக்கும் பெயராயிற்று. ஈளை - கபத்தா லுண்டாகும்
இழைப்பு; பிறர் வீளையெனப் பிரித்தது பொருந்தாமை காண்க. இளமை
யெய்த வேத்திரம் வருடியும் கருவடைய நீறளித்தும் என்க. (16)
அகர மாதிமூன் றாகிய வாகரு டணமே
புகரி லாவதி ரிச்சிய மஞ்சனம் பொருவில்
வகர மாதிமூன் றாகிய வசியமே வாதம்
இகலி லாவயத் தம்பமென் றின்னவை செய்தும்.
|
(இ
- ள்.) அகரம் ஆதி மூன்றாகி - அகரத்தை முதலாகவுடைய
மூன்றாகிய, ஆகருடணம் புகர் இலா அதிரிச்சியம் அஞ்சனம் -
ஆகருடணமும் குற்றமில்லாத அதிரிச்சயமும் அஞ்சனமும், பொருவுஇல்
வகரம் ஆதி மூன்றாகிய - ஒப்பில்லாத வகரத்தை முதலாகவுடைய
மூன்றாகிய, வசியம் வாதம் இகல் இலா வயத்தம்பம் - வசியமும் வாதமும்
மாறுபாடில்லாதவயத்தம்பமும், என்று இன்னவை செய்தும் - என்று
சொல்லப்டும் இவைகளைச் செய்தும்.
|