மீட்கமுடியாமல் அம்மகளிர்
வாட்டமுற்று, கலையும்சங்கும்துள்ள - ஆடையும்
வளையும் சரியவும், ஐங்கணையான் வாளி துளைப்ப - பஞ்சபாணனுடைய
கணைகள் உடலைத் துளைக்கவும், வெம்பசலை ஆகம் கொள்ளை கொண்டு
உண்ண - காம விருப்பாலாகிய நிற வேறுபாடு உடம்பு முழுதையும் கவர்ந்து
படரவும், நன்றார் - நின்றனர்; அந்நிலை அங்ஙனம் நின்ற நிலைமையை,
கொழுநீர் கண்டார் - அவர்கள் கணவராகிய தாருகவன முனிவர்கள்
கண்டனர்.
உயங்கினார்
: முற்றெச்சம். கலை - மேகலையுமாம். துள்ள - சரிய
என்னும் பொருட்டு. ஐங்கணையான் : காமன்; பெயர். வெம்மை - விருப்பம்;
கொடுமையுமாம். உடல் முழுதும் போர்த்து வருத்தலை ஆகங்கொள்ளை
கொண் டுண்ண என்றார். (14)
பொய்தவ
வடிவாய் வந்து நம்மனைப் பொன்னி னன்னார்
மெய்தழை கற்பை நாணை வேரொடுங் களைந்து போன
கைதவன் மாடக் கூடற் கடவுளென் றெண்ணித் தேர்ந்தார்
செய்தவ வலியாற் கால மூன்றையுந் தெரிய வல்லார். |
(இ
- ள்.) செய்தவ வலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார் -
செய்கின்ற தவத்தின் வன்மையால் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிய வல்ல
அத்தாருகவன முனிவர், பொய்தவ வடிவாய் வந்து - பொய்த்த
தவவேடத்துடன் வந்து, நம்மனைப் பொன்னின் அன்னார் - நமது
மனையிலுள்ள திருமகள்போலும் மனைவியரின், மெய்தழை கற்பை நாணை -
உண்மை மிக்க கற்பினையும் நபணையும், வேரொடும் களைந்து போன
கைதவன் - அடியொடும் களைந்து சென்ற வஞ்சகன், மாடக் கூடல் கடவுள்
என்று எண்ணித் தேர்ந்தார் - மாடங்கள் நெருங்கிய கூடலில் வீற்றிருக்கும்
சோமசுந்தரக் கடவுளே என்று சிந்தித்துணர்ந்தார்கள்.
பொய்தவ
வடிவு, வினைத்தொகை யாகலின் இயல்பாயிற்று. தொடை
நோக்கித் தகரம் தொக்க தென்றுமாம். பொன்னினன்னார். சாரியை நிற்க
வருபு தொக்கது. எண்ணும்மைகள் தொக்கன. மாடக் கூடல் - நான்மாடக்
கூடல் எனலுமாம். காலம் : ஆகுபெயர். கால மூன்றையும் தெரிய வல்லாரை
"மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியி னாற்றிய அறிவர்" எனக்
கூறுவர் தொல்காப்பியர். (15)
[-
வேறு]
|
கற்புத்
திரிந்தார் தமைநோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீராழ*
வெற்புத் திரிந்த மதிற்கூடன் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியா தவதரிப்பீர் போமென் றிட்ட சாபங்கேட்
டற்புத் திரிந்தா ரெங்களுக்கீ தகல்வ தெப்போ தெனமுனிவர். |
(இ
- ள்.) கற்புத் திரிந்தார் தமை நோக்கி - கற்புநிலை மாறுபட்ட
தம் மனைவியரைப் பார்த்து, நீர் கருத்துத் திரிந்தீர் - நீவிர் மனம்
வேறுபட்டீர்கள் (ஆதலால்) ஆழி வெற்புத்திரிந்த மதில்கூடல் மேய -
சக்கரவாளகிரி தனது வடிவந் திரிந்து வந்தாலொத்த மதில் சூழ்ந்த கூடலில்
வசிக்கும். வணிகர்
(பா
- ம்.) * நீளாழி.
|